7 பேர் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தையும் ஏமாற்றியுள்ளனர்- திருமாவளவன்

 

7 பேர் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தையும் ஏமாற்றியுள்ளனர்- திருமாவளவன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு ஆளுநரிடம் பரிந்துரைத்தது. ஆனால் அவர் அதுகுறித்த முடிவை எடுக்காமல் காலம் தாழ்த்தினார். இதனிடையே 7 பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களுக்குள் முடிவெடுப்பார் என மத்திய அரசின் சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலையை குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் எனவும், 7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரையை சட்டத்திற்கு உட்பட்டு மத்திய அரசு பரிசீலிக்கும் எனவும் தெரிவித்தார்.

This image has an empty alt attribute; its file name is gU5sJIYw

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், “7 பேர் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தையும் ஏமாற்றியுள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை மூட நம்பிக்கையே என்பது உறுதி” எனக் கூறியுள்ளார்.