ஒப்புதல் அளிக்கவில்லையெனில் ஜல்லிக்கட்டை போல போராட்டம் வெடிக்கும் – திருமாவளவன் பேச்சு!

 

ஒப்புதல் அளிக்கவில்லையெனில் ஜல்லிக்கட்டை போல போராட்டம் வெடிக்கும் – திருமாவளவன் பேச்சு!

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லையெனில் ஜல்லிக்கட்டை போல போராட்டம் வெடிக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு வந்ததில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக, ஆட்சி அமைத்தவுடன் அதற்கான சட்டப்போராட்டத்தை தொடங்கியுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வது என்பது ஓரிரு நாட்களில் நடக்கும் காரியமல்ல. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும் வரை தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கமுடியாது. எனவே, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை முதல்வர் மு.க ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

ஒப்புதல் அளிக்கவில்லையெனில் ஜல்லிக்கட்டை போல போராட்டம் வெடிக்கும் – திருமாவளவன் பேச்சு!

அந்த மசோதாவுக்கு பாஜகவின் 4 எம்.எல்.ஏக்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு எந்த கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்ததையடுத்து நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அது தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் விரைந்து அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.

இந்த நிலையில், நீட் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி கனிமொழியின் உருவப்படத்திற்கு அரியலூரில் உள்ள அவரது இல்லத்தில் திருமாவளவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கனிமொழியின் பெற்றோரிடம் ரூ.1 லட்சம் நிதியுதவியும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போல பறந்துபட்ட மக்களின் போராட்டம் வெடிக்கும். அந்த அளவுக்கு மத்திய அரசு அனுமதிக்காது என நம்புகிறேன். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரும் உடனே கையெழுத்திட்டு அனுமதி தரவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.