திமுக மதுக்கடையை நம்பி திட்டங்களை கொண்டு செல்லாது – திருமா

 

திமுக மதுக்கடையை நம்பி திட்டங்களை கொண்டு செல்லாது – திருமா

உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்பதை கவர்ச்சிக்காக மட்டுமே அதிமுக அரசு நடத்தியது என வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திமுக மதுக்கடையை நம்பி திட்டங்களை கொண்டு செல்லாது – திருமா

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தமிழக நிதி நிலைமை குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேல் கடன் உள்ளதால் ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசுக்கு நிதி நெருக்கடி அதிகரித்து சுமையும் அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சியில் விட்டு சென்ற கடன்களுக்கு வட்டி செலுத்துவதே திமுகவுக்கு பெரும் பாடாக இருக்கும்.

அதிமுகவை பொறுத்தவரை வருவாய் ஈட்ட கூடிய வளர்ச்சி திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், முதலீட்டர்கள் ஈர்ப்பு என்பதும் கைவிடப்பட்டது. மத்திய அரசிடம் இருந்து ஜி.எஸ்.டி நிதி வாங்கும் வலிமையும் அப்போதைய அதிமுக அரசிடம் இல்லாததால் மாநிலத்தின் நிதி அதளபாதளத்தில் கொண்டு சென்றுள்ளது. இதனால், திமுக அரசு புதிய வரி விதிப்பு அல்லது மாற்று ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

எளியோர்களை பாதிக்காத வகையில் பட்ஜெட் கொண்டு வருவார்கள் என நம்புகிறோம். மதுக்கடையை நம்பி திமுக திட்டங்களை கொண்டு செல்லாது என நம்புகிறோம். 2013-க்கு பிறகு 2021 வரை மாநிலத்தின் பொருளாதார மிக கடுமையாக சரிந்துள்ளது. இதற்கு காரணம் ஊழல், வளர்ச்சி திட்டங்கள் இல்லை, மத்திய அரசிடம் இருந்து வருவாய் கேட்டு பெறவில்லை. அதிமுக ஆட்சியில் கடன் தொகை அதிகரிக்க ஊழலும் ஒரு காரணம். உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்பதை கவர்ச்சிக்காக மட்டுமே அதிமுக அரசு நடத்தியது” எனக் கூறினார்.