“நண்பர் ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது ” – தொல்.திருமாவளவன்

“நண்பர் ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது ” –  தொல்.திருமாவளவன்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல், உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

“நண்பர் ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது ” –  தொல்.திருமாவளவன்

கடந்த 2017ம் ஆண்டில் இருந்து ரஜினி அரசியலில் களமிறங்கவிருக்கிறார் என்பது பேசு பொருளாக மாறியிருக்கிறது. ஆனால் இப்போது வரை ரஜினி, கட்சி தொடங்குவது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் அவர் அரசியலுக்கு வருவாரா? என்பதே புரியாத புதிராக இருக்கிறது.

“நண்பர் ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது ” –  தொல்.திருமாவளவன்

கடந்த 2 நாட்களுக்கு முன்னர், ‘ தனக்கு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் கட்சி தொடங்க முடியாது. டிசம்பரில் எந்த விதமான முடிவை அறிவித்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள தயாராக இருங்கள்’ என ரஜினி எழுதியது போன்ற போலி கடிதம் ஒன்று இணைய தளத்தில் வைரல் ஆகி விவாதத்தை கிளப்பியது. இது குறித்து விளக்கம் அளித்த ரஜினி, ‘அது நான் எழுதிய கடிதம் இல்லை. அதில் குறிப்பிடப்பட்டிருந்த உடல்நிலை குறித்த தகவல் உண்மை தான்’ என தெரிவித்திருந்தார்.

“நண்பர் ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது ” –  தொல்.திருமாவளவன்

இந்த நிலையில், நடிகர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். ரஜினி நல்ல முடிவை எடுத்திருக்கிறார், சாதி மத அரசியலில் சிக்கிக் கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம். நலத்தோடும், வளத்தோடும் ரஜினி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதே போல, நடிகர் ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.