மொறு மொறு திருமால் வடை!

 

மொறு மொறு திருமால் வடை!

கும்பகோணம் பகுதியில் திருமால் வடை, பிரசித்திபெற்றது.
இந்த வடையை ருசிப்பதற்காகவே சனிக்கிழமைதோறும் வடை பிரியர்கள் காந்தி பூங்கா அருகே உள்ள உணவகத்துக்கு வந்து செல்வார்கள். 50, 60 வடைகள்தான் சுடுவார்கள். ஆனால், உடனே விற்றுப்போகும். இதனையும் வீட்டில் செய்யலாம்.

மொறு மொறு திருமால் வடை!

தேவையான பொருட்கள்:
கருப்பு உளுந்து – அரை கிலோ
மிளகு – 20 கிராம்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு..
உளுந்தை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துப் பின்னர் தண்ணீர் வடித்து அரைத்துக்கொள்ளுங்கள். முழுமையாக உளுந்து மசியக் கூடாது. அரை பதத்துக்கு அரைத்தால் போதும். இதோடு மிளகையும் காரத்துக்கு ஏற்ப சேர்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் இருக்கக் கூடாது. தேவையான அளவு உப்பு சேர்த்து, மாவைச் சூடான எண்ணெய்யில் பெரிதாகத் தட்டிப்போட்டு நன்கு வெந்ததும் எடுத்துவிடுங்கள். அரை கிலோ உளுந்துக்குப் பத்து வடைகள் வரை கிடைக்கும். இவை முறுக்குபோல் மொறுமொறுவென இருக்கும்.

மொறு மொறு திருமால் வடை!


– இர.போஸ்