திருச்செந்தூர் கோவில் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை!

 

திருச்செந்தூர் கோவில் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை!

புத்தாண்டு தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருக்கும் கடற்கரையில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் நாளை புத்தாண்டு கொண்டாடப்படவிருக்கிறது. இதையொட்டி மக்கள் கோவில்களுக்கும் சுற்றுலா தலங்களுக்கும் செல்வார்கள் என்பதால், கொரோனாவை கட்டுப்படுத்தும் பொருட்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்றும் நாளையும் கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் கோவில் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை!

அறுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர் கோவிலில் நாளை காலை 3.மணிக்கு நடை திறக்கப்பட்டு, தீபஆராதனை நடைபெறவிருக்கிறது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலேயே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. நேற்று ஆருத்ரா தரிசனத்தையொட்டி, கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறவிருப்பதால் கடற்கரையில் மக்கள் நீராட தடை விதிக்க பட்டிருக்கிறது.