சந்திர பகவானின் சாபத்தை போக்கிய ‘திங்களூர் ஈசன் கைலாசநாதர்’

 

சந்திர பகவானின் சாபத்தை போக்கிய ‘திங்களூர் ஈசன் கைலாசநாதர்’

நவகிரக தலங்களில் சந்திரனுக்கு உரிய தலமாக வணங்கப்படுவது திங்களூர். ஞாயிறு எப்படி சூரியனோ திங்கள் அப்படி சந்திரன் ஆகும் . தட்சனின் 27 மகளையும் மணமுடித்து இருந்தார் சந்திரன். இரு மனைவி கட்டியவருக்கே பல சிக்கல் வரும் போது 27 மனைவிகள் உள்ள சந்திரனின் நிலையை கேட்கவா வேண்டும் ? 27 மனைவிகளில் சந்திரன் ரோகிணி என்பவருடன் மட்டும் கூடுதல் பிரியத்துடன் இருப்பதாக மற்றவர்களுக்கு பொறாமை. சும்மா இருப்பார்களா ? தங்கள் தந்தை தட்சனிடம் போய் முறையிட்டார்கள். தட்சன் மாப்பிள்ளை சந்திரனை கூப்பிட்டு எல்லோரிடமும் அன்பாய் நடந்து கொள்ளும்படி அறிவுறுத்தினார். அவரது அறிவுரையை சந்திரன் கேட்கவில்லை. மாறாக ரோகிணியின் மீதே வஞ்சையுடன் நடந்து கொண்டான். தட்சனின் கோபம் எல்லை மீற மாப்பிள்ளை என்றும் பாராமல் பிடி சாபம் என’ உன் அழகு கலைகள் தேய்ந்து போகட்டும் ‘என சாபம் இட்டான்.

சந்திர பகவானின் சாபத்தை போக்கிய ‘திங்களூர் ஈசன் கைலாசநாதர்’

பதறிப்போன சந்திரன் சாபவிமோசனம் பெற வழி தேடிய போது ரிஷிகளின் ஆலோசனைப்படி சிவனை வழிபட அவன் வந்து சேர்ந்த இடம்தான் இன்று திங்களுர் என்று அவன் பெயராலேயே வழங்கப்படுகிறது.

சந்திரனை முடியில் சூடியதால் சந்திரசூடன், பிறைசூடன், சந்திரசேகரன், சந்திரமௌலி என்றெல்லாம் சிவபெருமானை பக்தர்களுக்கு அழைத்து வழிபடுகின்றனர் .

சந்திர சிவனை பூஜித்து சபவிமோசனம் பெற்றதிருத்தலமான திங்களுரில் ஈசன் கைலாசநாதர் என்ற திருநாமத்துடன் கோயில் கொண்டுள்ளார் அம்பாள் திருநாமம் பெரியநாயகி . சின்னஞ்சிறு கிராமமாக உள்ளது திங்களுர். காவிரி பாய்ந்து வளம் சேர்ப்பதால் ஊர் பசுமையாக உள்ளது. 2ஆயிரம் ஆண்டுகால பழமை வாய்ந்த கோயிலாக உள்ளது திங்களூர் கைலாசநாதர் கோயில். தல விருட்சமாக வில்வமரமும் தீர்த்தமாக சந்திர புஷ்கரணியும். தேவார வைப்பு தலமாகவும் திங்களூர் உள்ளது .63 நாயன்மார்களில் அப்பூதியடிகள் அவதரித்த தலம் திங்களுர் தான். சமய குரவர்கள் நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசர் மீது பக்திபூண்டு. அவர் பெயரால் பல நல்லறங்கள் செய்தவதையே சிவதொண்டாக கொண்டு வாழ்ந்தவர்.

சந்திர பகவானின் சாபத்தை போக்கிய ‘திங்களூர் ஈசன் கைலாசநாதர்’

அப்பூதியடிகளுக்கு தேன்மொழி தேவி என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் இருந்தனர் . பெரிய மகன் பெயர் மூத்த திருநாவுக்கரசு , சின்ன மகன் பெயர் இளைய திருநாவுக்கரசு . மக்கள் சேவையே மகேசன் சேவை என்கிற கொள்கையுடன் அப்பூதியடிகள், திருநாவுக்கரசர் பெயரில் தண்ணீர் பந்தல், அன்னதானம் கூடம் அமைத்து மக்களுக்கு சேவை செய்து வந்தார்.

தல யாத்திரை மேற்கொண்டிருந்த திருநாவுக்கரசர் திங்களுர் வந்த போது அங்கே பல இடக்களில் தாம் பெயரால் அறநிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பது கண்டு ஆச்சரிமுற்று  தன்பெயரிலன்றி என் பெயரில் தொண்டாற்றும் அவர் யார் என விசாரித்துக் கொண்டு அப்பூதியடிகள் வீடு வந்து சேர்ந்தார்.

சந்திர பகவானின் சாபத்தை போக்கிய ‘திங்களூர் ஈசன் கைலாசநாதர்’

இதற்கு முன் நாவுக்கரசரை அவர்கள் பார்த்ததில்லை எனவே வந்தவரை யாரோ அடியார் என வரவேற்றனர் அப்பூதியடிகள் குடும்பத்தினர். ‘ ஏனய்யா நீங்கள் அறநிலையங்களை உங்கள் பெயரில் வைத்துக்கொள்ளாமல் யாரோ கிழவன் பெயரில் நடத்துவதேன் ‘ எனகேட்டார் . அது கேட்டு கோபமுற்ற அப்பூதியடிகள் ‘அய்யா அவரை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ‘ என தங்கள் நாவுக்கரசர் கொண்டுள்ள அன்பையும் மதிப்பையும் விளக்கினார். ‘ அப்படியா ‘ என்ற நாவுக்கரசர் , அவர் நான் தான் என்றார் . அது கேட்டு நெகிழ்ந்து போன அப்பூதியடிகள் குடும்பத்தினர் அவரது பாதங்களை நமஸகரித்து ஆசிபெற்றனர். தங்கள் வீட்டில் உணவருந்த வேண்டுமென விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். சாப்பாட்டுக்கு இலை அறுக்க சென்றான் அப்பூதியடிகளின் முத்த மகன். வாழைத்தோட்டத்தில் நாகப்பாம்பு கடித்து இறந்து விட, அது கேட்டு வருந்திய நாவுக்கசர். இறந்த பிள்ளையை ஈசன் சன்னதிக்கு எடுத்து சென்று

ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர் வரை ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்
ஒன்று கொலாம் இடு வெண்தலை கையது
ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே என்று பாடினார்.

சந்திர பகவானின் சாபத்தை போக்கிய ‘திங்களூர் ஈசன் கைலாசநாதர்’

அந்த பதிகம் பாடி முடித்ததும் உடலில் இருந்த பாம்பு விடம் இறங்கி அப்பூதியடிகளின் மகன் உறக்கம் கலைந்து எழுபவன் போல் எழுந்தான் . ஊரே பார்த்து வியந்தது . நாவுக்கரசர் அவனுக்கும் திருநீறு அணிவித்து பின் அவர்கள் வீடு சென்று உணவு அருந்தினார் . இந்நிகழ்வை போற்றும் வண்ணம் . நாவுக்கரசர் திருவுருவத்தோடு அப்பூதியடிகள் குடும்பத்தினர் திருவுருவ சிலைகளும் திங்களூர் கோயிலில் உள்ளன.

சந்திர பகவானின் சாபத்தை போக்கிய ‘திங்களூர் ஈசன் கைலாசநாதர்’

திங்களுரில் சிவனை வழிபட்ட சந்திரனுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது . குழந்தைக்கு முதல் சோறு ஊட்டும் நிகழ்வான ‘அன்னப்பிரசானம்’ செய்ய புகழ்பெற்ற கோயிலாக உள்ளது கேரள மாநிலம் குருவாயூர் கோயில். அதே போல் தமிழகத்தில் குழந்தைகளுக்கு ‘அன்னப்பிரசானம்’ செய்வதற்கு மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக திங்களூர் உள்ளது . அஸ்வினி, மிருகசீரிடம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி போன்ற நட்சத்திர தினங்களில் சந்திரஹோரை வேளையில் திங்களுர் கைலாசநாதர் கோயிலில் சந்திரனையும், பசுவையும் காட்டி வெள்ளிக் கிண்ணத்தில் பால், தேன் கலந்து குழந்தைக்கு சோறூட்டும் விழா நடத்துக்கின்றர்.

சந்திர பகவானின் சாபத்தை போக்கிய ‘திங்களூர் ஈசன் கைலாசநாதர்’

நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்குரிய பரிகார தலமாக திங்களுர் கைலாசநாதர் கோயில் விளங்குவதால் இங்கு வந்து ஈசன் கைலாசநாதர், அம்பாள் பெரியநாயகியோடு சந்திரனையும் வழிபாட சகல தோஷங்களும் நீங்கி பரிபூரண நலன் பெறலாம் . நமசிவாய வாழ்க. தஞ்சை மாவட்டம் திருவையாறு – கும்பகோணம் வழிதடத்தில் திருப்பழனம் அருகே உள்ளது திங்களுர் . வாருங்கள் வழிபடுவோம் நலம் பெறுவோம்.

-மு.ரா.சுந்தரமூர்த்தி