பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை- சிபிஐ

 

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை- சிபிஐ

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், பேரறிவாளன் உள்பட 7 பேர் சுமார் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தண்டனையை 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை- சிபிஐ

கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி, தமிழக அமைச்சரவை கூடி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்தது. ஆனால் ஆளுநர் அதற்கு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

இந்நிலையில் தன்னை விடுதலை செய்ய நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டுமெனக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்திருந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “பேரறிவாளன் விடுதலையில் ஆளுநரே முடிவெடுக்க முடியும்.பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் சிபிஐக்கு எந்த பங்கும் இல்லை. இதில் சிபிஐ தலையிடமுடியாது. ” எனக் குறிப்பிட்டிருந்தது.