அவர்கள் சட்டவிரோதமாக குடியேறயவில்லை..தஞ்சம் புகுந்தவர்கள்-மத்திய அரசின் தவறை சுட்டிக்காட்டும் ராமதாஸ்

 

அவர்கள் சட்டவிரோதமாக குடியேறயவில்லை..தஞ்சம் புகுந்தவர்கள்-மத்திய அரசின் தவறை சுட்டிக்காட்டும் ராமதாஸ்

திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் வாழும் ஈழத்தமிழர்கள் தங்களுக்கு இந்தியக் குடியுரிமை கோரி தொடர்ந்த வழக்குகளை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, அவர்கள் அனைவரிடமும் விண்ணப்பம் பெற்று, மத்திய அரசுக்கு அனுப்பி இந்தியக் குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கும்படி திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஆணையிட்டார். அதன்மீது நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த நிலையில், இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க ஆணையிட்டு நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

அவர்கள் சட்டவிரோதமாக குடியேறயவில்லை..தஞ்சம் புகுந்தவர்கள்-மத்திய அரசின் தவறை சுட்டிக்காட்டும் ராமதாஸ்

இந்த வழக்கு விசாரணையில், இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றும், அதனால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.

மத்திய அரசின் இந்த நிலைப்பாடு தவறானது; சூழல்களை கருத்தில் கொள்ளாத எந்திரத்தனமானது ஆகும் என்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். இலங்கைத் தமிழ் அகதிகள் எவரும் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையவில்லை. அவர்கள் தஞ்சம் புகுந்தவர்கள். கடல்வழியாக வந்தவர்கள் காவல்துறையினரிடம் சரணடைந்து, மத்திய, மாநில அரசுகளின் கண்காணிப்பில் தான் அவர்கள் காலம் கழித்து வருகின்றனர். அவர்கள் எந்த சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடவில்லை. அவர்களை சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று குற்றஞ்சாட்டுவது தவறாகும் என்கிறார் ராமதாஸ்.

அவர்கள் சட்டவிரோதமாக குடியேறயவில்லை..தஞ்சம் புகுந்தவர்கள்-மத்திய அரசின் தவறை சுட்டிக்காட்டும் ராமதாஸ்

மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சொந்த நாடுகளில் கொடுமைக்கு உள்ளாகி இந்தியாவில் நீண்டகாலமாக தங்கியிருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அந்த உரிமையை இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதம், இனம் ஆகியவற்றின் பெயரால் கொடுமைகளுக்கு ஆளாகி, இந்தியாவுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் போது, இலங்கையிலிருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் அந்த உரிமை மறுக்கப்படுவது சரியல்ல. இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தான் சரியானது ஆகும் என்கிறார்.

மேலும் இந்த விவகாரத்தில், ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.