ஆக்டிவ் கேஸஸில் முதல் 10 மாநிலங்கள் இவைதாம் – இந்தியாவில் கொரோனா நிலவரம்

 

ஆக்டிவ் கேஸஸில் முதல் 10 மாநிலங்கள் இவைதாம் – இந்தியாவில் கொரோனா நிலவரம்

கொரோனா நோய்த் தொற்றில் உலகளவில் மூன்றாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. என்றாலும் மற்ற நாடுகளை விட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கும் செய்தியாகும்.

இறப்பு விகிதம் குறைவாக இருப்பதும், குணம் அடைபவர்களின் சதவிகிதம் அதிகரிப்பதும் ஆறுதலான செய்திகள். எனினும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுப்படுவதாக இல்லை. அது குறையும்பட்சத்தில்தான் கொரோனாவிலிருந்து விடுதலை பெறும் நாள் கண்ணில் தெரியும்.

ஆக்டிவ் கேஸஸில் முதல் 10 மாநிலங்கள் இவைதாம் – இந்தியாவில் கொரோனா நிலவரம்

இந்திய அளவில், ஆகஸ்ட் 8 காலை நேர நிலவரப்படி, கொரோனா நோய்த் தொற்றில் அதிகம் ஆக்டிவ் கேஸஸ் உள்ள மாநிலங்களில் முதல் பத்து மாநிலங்களைப் பார்ப்போம்.

முதல் இடம்: கொரோனா நோய்த்தொற்று தொடங்கிய நாள்முதலே மகாராஷ்டிரா மாநிலமே முதல் இடத்தில் இருக்கிறது. இங்கு மொத்த பாதிப்பு 4.90,262. குணம் அடைந்திருப்பவர்களின் எண்ணிக்கை 3,27,281. இறந்தவர்களின் எண்ணிக்கை 17.092. தற்போது சிகிச்சையில் இருப்போர் 1,45,889 பேர்.

இரண்டாம் இடம்: ஆந்திர பிரதேசம், தொடக்கத்தில் கட்டுக்குள் வைத்திருந்தாலும் கடந்த ஒரு மாதமாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு மொத்த பாதிப்பு 2,.06,960. குணம் அடைந்திருப்பவர்களின் எண்ணிக்கை 1,20,464. இறந்தவர்களின் எண்ணிக்கை 1.842. தற்போது சிகிச்சையில் இருப்போர் 84,654 பேர்.

மூன்றாம் இடம்: கர்நாடகா. இங்கும் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த நோய்த் தொற்று கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. இங்கு மொத்த பாதிப்பு 1.64,924. குணம் அடைந்திருப்பவர்களின் எண்ணிக்கை 84,232. இறந்தவர்களின் எண்ணிக்கை 2,998. தற்போது சிகிச்சையில் இருப்போர் 77,694 பேர்.

ஆக்டிவ் கேஸஸில் முதல் 10 மாநிலங்கள் இவைதாம் – இந்தியாவில் கொரோனா நிலவரம்

நான்காம் இடம்: கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து நான்காம் இடத்திலேயே உள்ளது தமிழ்நாடு. இங்கு மொத்த பாதிப்பு 2.85,024. குணம் அடைந்திருப்பவர்களின் எண்ணிக்கை 2,27,575. இறந்தவர்களின் எண்ணிக்கை 4690. தற்போது சிகிச்சையில் இருப்போர் 52,759 பேர்.  (நேற்று முன்னிரவு வந்த ரிசல்ட்படி மொத்த எண்ணிக்கை 2,90,907)

ஐந்தாம் இடம்: உத்திரப் பிரதேசம்: இங்கு மொத்த பாதிப்பு 1.13,378. குணம் அடைந்திருப்பவர்களின் எண்ணிக்கை 66,834. இறந்தவர்களின் எண்ணிக்கை 1981. தற்போது சிகிச்சையில் இருப்போர் 44,563 பேர்.

ஆக்டிவ் கேஸஸில் முதல் 10 மாநிலங்கள் இவைதாம் – இந்தியாவில் கொரோனா நிலவரம்

ஆறாம் இடம்: பீகார்.இங்கு தற்போது சிகிச்சையில் இருப்போர் 26,453.

ஏழாம் இடம்: மேற்கு வங்கம். இங்கு தற்போது சிகிச்சையில் இருப்போர் 24,652.

எட்டாம் இடம்: தெலுங்கான. இங்கு தற்போது சிகிச்சையில் இருப்போர் 22,568.

ஒன்பதாம் இடம்: அசாம். இங்கு தற்போது சிகிச்சையில் இருப்போர் 16,555.

பத்தாம் இடம்: குஜராத். இங்கு தற்போது சிகிச்சையில் இருப்போர் 14,443.