Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் உணவு சாப்பிட்டதும் செய்யக்கூடாத விஷயங்கள் இவைதாம்!

உணவு சாப்பிட்டதும் செய்யக்கூடாத விஷயங்கள் இவைதாம்!

நம் உடலில் ஆரோக்கியத்தை அளிப்பது உணவுகளே. அனைத்து வகை சத்துகளும் சரிவிகிதத்தில் கிடைக்குமாறு நம் உணவுப் பழக்கத்தை அமைத்துக்கொள்வது அவசியம்.

ஜங் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் ஆகியவற்றைத் தவிர்ப்பதே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இல்லையெனில், அது தரும் கெடுதல்களுக்கு சிகிச்சை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.

நல்ல உணவுகளைச் சாப்பிடுவது முக்கியம் என்பதுபோலவே, உணவு சாப்பிட்டதும் சில விஷயங்களைச் செய்யக்கூடாது என்றும் மருத்துவத் துறை சார்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

அவை என்னென்ன என்பதை வரிசையாகப் பார்ப்போம்.

ஒன்று:  சாப்பிட்டு முடித்ததும் உடனே பழ வகைகளைச் சாப்பிட வேண்டாம். ஏனெனில், அப்படிச் சாப்பிடும்பட்சத்தில் வயிற்றில் வாயுத் தொல்லையை ஏற்படுத்தி விடக்கூடும். உடல் எடையையும் அதிகரிச்செய்யக்கூடும்.  ஒரு மணி நேரத்திற்குப் பிறகு விருப்பமான பழங்களைத் தாராளமாகச் சாப்பிடலாம்.

இரண்டு: உணவு சாப்பிட்டதும் டீ அல்லது காபி குடிப்பதைத் தவிருங்கள். தேயிலையில் உள்ள அமிலத்தன்மை செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்திவிடக் கூடும். குறிப்பிட்ட நேரம் கழித்து டீ அல்லது காபி குடிக்கலாம்.

மூன்று: பொதுவாக குளிக்கும்போது உடலின் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சாப்பிட்டப்பின் குளிக்கச் செல்லும் பழக்கம் சிலருக்கு உண்டு. அப்படிச் செய்யும்போது செரிமானச் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, சாப்பிட்டு குறைந்தது ஒரு மணி நேரத்திற்குள் குளிப்பதைத் தவிருங்கள்.

smoking

நான்கு: சிகரெட் பிடிப்பது எப்போதுமே உடலுக்குக் கெடுதல்தான். அதிலும் சாப்பிட்டதும் சிகரெட் பிடிப்பது இன்னும் கெடுதல் தரக்கூடியதாக மாறிவிடும்.

ஐந்து: மதியமோ இரவோ எப்போது சாப்பிட்டாலும் உடனே படுத்து விடாதீர்கள். இதுவும் செரிமானப் பிரச்சினையை உருவாக்கக் கூடும். அதனால், சாப்பிட்டது அரை மணி நேரத்திற்குள் படுப்பதைத் தவிருங்கள்.

ஆறு: பலருக்கு சாப்பிட்டதும் ஜில் என்று ஐஸ் வாட்டர் குடிக்கும் பழக்கம் இருக்கும். சிலருக்கு ஐஸ்கிரிம் சாப்பிடுவது வழக்கமாக இருக்கும். ஆனால், நாம் சாப்பிட்ட உணவு முறையாக செரிமானம் ஆக, உடலில் வெப்பம் போதுமான அளவு இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்போது நீங்கள் குளிர்ச்சியாக இவற்றைச் சாப்பிடுவது என்பது உணவு செரிமானத்திற்கு இடையூறாக அமைந்துவிடக் கூடும். எனவே சாப்பிட்ட பிறகு உடனே குளிர்ச்சியான பொருட்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

 சாப்பிட்டதும் உடற்சி செய்யக்கூடாது, நடைப்பயிற்சி மேற்கொள்ளக்கூடாது என்பது உட்பட பல விஷயங்கள் உள்ளன. அவற்றைத் தெரிந்துகொள்வதும் பின்பற்றுவதும் அவசியம்.

ஏனெனில், உணவே மருந்து என்று சொல்லும் காலகட்டத்தில் இருக்கிறோம். அப்படியெனில் மருந்தாகச் செல்லும் உணவின் சத்துகள் முழுமையாக நமக்குக் கிடைக்க வேண்டும். செரிமானச் சிக்கலும் ஏற்படாமலும் இருக்க வேண்டும்.

Most Popular

விவசாயின் மகனாக சொல்கிறேன், மோடி அரசு விவசாயிகளுக்கு எதிராக எதுவும் செய்யாது… ராஜ்நாத் சிங் உறுதி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக எதுவும் செய்யாது என்பதை ஒரு விவசாயின் மகனாக தெளிவுப்படுத்த விரும்புகிறேன் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பஞ்சாபில் தீவிரமாகும் போராட்டம்.. ராகுல் காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி நாளை தொடங்குகிறது…

பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. ராகுல் காந்தி தலைமையில் நாளை முதல் 3 நாட்களுக்கு டிராக்டர் பேரணியை காங்கிரசார் நடத்த உள்ளனர்.

பீகாரில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பா.ஜ.க.வின் பிரபல தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை…

பீகாரில் பா.ஜ.க.வின் பிரபல தலைவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் பா.ஜ.க.வில் பிரபலமான தலைவர் ராஜேஷ் ஜா. பாட்னாவில்...

என் தாத்தா மேல பழி போடாதீங்க… காங்கிரஸை எச்சரித்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் பேரன்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்ப்பு காங்கிரஸின் முகத்தில் அறைந்தது. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மீது குற்றம் சாட்டுவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும் என அவரது...
Do NOT follow this link or you will be banned from the site!