’பரிசோதனைகளை அதிகரியுங்கள்’ மத்திய அரசு வலியுறுத்தும் 9 மாநிலங்கள் இவைதாம்!

 

’பரிசோதனைகளை அதிகரியுங்கள்’ மத்திய அரசு வலியுறுத்தும் 9 மாநிலங்கள் இவைதாம்!

உலகில் இப்போது அதிகம் உச்சரிக்கும் சொல்லாக ‘கொரோனா’ என்பது மாறிவிட்டது. சீனாவில் எட்டு மாதங்களுக்கு முன் தொடங்கிய கொரோனா பேரழிவு உலகை மிரட்டி வருகிறது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல.

மார்ச் மாதம் தொடங்கிய இந்திய அளவிலான பேரழிவு இன்றளவும் அதிகரித்துக்கொண்டே இருக்கிற இன்றளவும் அதிகரித்துக்கொண்டே இருக்கி்றது. மகாராஷ்ட்ரா முதலிடத்திலும் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் டெல்லி மூன்றாம் இடத்திலும் கொரோனா பாதிப்பில் உள்ளன.

இந்நிலையில் கொரோனா தொற்று குறைவாகக் காணப்பட்ட மாநிலங்களிலும் கடந்த சில நாள்களாக புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் 9 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார்.

’பரிசோதனைகளை அதிகரியுங்கள்’ மத்திய அரசு வலியுறுத்தும் 9 மாநிலங்கள் இவைதாம்!

ஆந்திரப் பிரதேசம், பீகார், தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், அசாம், கர்நாடகா, ஜார்கண்ட், உத்திரப் பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களைச் சேர்ந்த தலைமைச் செயலாளர்கள் மற்று சுகாதாரத்துறை செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் மாநிலத்தில் கொரோனா பரவல் குறித்து கூறினார்கள்.

ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இந்த 9 மாநிலங்களுக்கான அறிவுறுத்தலாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களை முறையாக எல்லை பிரித்தல்; நோயாளிகளின் தொடர்பில் இருந்தவர்களைத் தடமறிதல் மற்றும் கட்டுப்பாட்டுப் பகுதியில் வீடு வீடாகப் பரிசோதனை செய்தல் ஆகியவற்றின் மூலம் நோய் பரவல் சங்கிலித் தொடரை உடைக்க முடியும்.

’பரிசோதனைகளை அதிகரியுங்கள்’ மத்திய அரசு வலியுறுத்தும் 9 மாநிலங்கள் இவைதாம்!
URUMQI, CHINA – JULY 19: A medical worker swabs throat of a citizen for nucleic acid testing during the COVID-19 epidemic on July 19, 2020 in Urumqi, Xinjiang Uygur Autonomous Region of China. (Photo by Shi Yujiang/China News Service via Getty Images)

கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கு வெளியில் உள்ள இடைமுக மண்டலங்களிலும், SARI/ILI போன்ற தீவிர மூச்சுக் கோளாறுகள் உள்ளவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பதும் அவசியம். முடிந்தளவு பரிசோதனைகள அதிகரிக்க வேண்டும் போதிய அளவில் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவக் கட்டமைப்பில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும்’ என்று கூறப்பட்டது.