கொரோனா பாதிப்பில் 10 லட்சத்தை நெருங்கும் 3 நாடுகள் இவைதாம்!

 

கொரோனா பாதிப்பில் 10 லட்சத்தை நெருங்கும் 3 நாடுகள் இவைதாம்!

கொரோனாவில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டேதான் இருக்கிறது தவிர குறைந்த பாடில்லை. சில நாடுகளில் குறைவதைப் போல இருந்தாலும், வேறு சில நாடுகளில் மறு அலை கொரோனா வந்து சிதறடிக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 95 லட்சத்து 87 ஆயிரத்து 475 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 09 ஆயிரத்து 135 பேர்.

கொரோனா பாதிப்பில் 10 லட்சத்தை நெருங்கும் 3 நாடுகள் இவைதாம்!

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 96 லட்சத்து 58 ஆயிரத்து 928 நபர்கள். இதன் பிறகு அப்டேட் செய்யப்பட்டிருக்கும் பட்டியலில் புதிதாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,381 சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆக, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 82,88,278 பேரும், இந்தியாவில் 74,32,680 பேரும், பிரேசில் நாட்டில் 52,01,570 பேரும், ரஷ்யாவில் 13,69,313 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இவற்றிற்கு அடுத்தப்படியாக, மூன்று நாடுகள் 10 லட்சம் பாதிப்புகளை நெருங்கி வந்துகொண்டிருக்கின்றன.

கொரோனா பாதிப்பில் 10 லட்சத்தை நெருங்கும் 3 நாடுகள் இவைதாம்!

ஸ்பெயின் நாட்டின் மொத்த பாதிப்பு 9 லட்சத்து 82 ஆயிரத்து 723. இவர்களில் 33,775 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.

அர்ஜெண்டினா நாட்டின் மொத்த பாதிப்பு 9 லட்சத்து 65 ஆயிரத்து 609. இவர்களில் 7,78,501 பேர் குணமடைந்துவிட்டனர். 25,723 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.

கொலம்பியா நாட்டின் மொத்த பாதிப்பு 9 லட்சத்து 45 ஆயிரத்து 354. இவர்களில் 8,37,001 பேர் குணமடைந்துவிட்டனர். 28,616 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.

இதற்கு அடுத்த நிலையில் பெரு, மெக்சிகோ, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.