துணை வேந்தராக ஒரு வன்னியர் கூட இல்லை… ராமதாஸ் கொந்தளிப்பு!

 

துணை வேந்தராக ஒரு வன்னியர் கூட இல்லை… ராமதாஸ் கொந்தளிப்பு!

தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு வன்னியர் கூட துணை வேந்தராக நியமிக்கப்படாதது அநீதி என்று டாக்டர் ராமதாஸ் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

துணை வேந்தராக ஒரு வன்னியர் கூட இல்லை… ராமதாஸ் கொந்தளிப்பு!
தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு துணை வேந்தர்களை ஆளுநர் நியமிக்கிறார். ஆனால், துணை வேந்தராக நியமிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பெயர் பட்டியலை தமிழக அரசு பரிந்துரை செய்யும். அந்த பட்டியலில் உள்ளவர்களில் ஒருவரையே துணை வேந்தராக ஆளுநர் நியமிப்பார். ஆனால், தற்போது இந்த பட்டியலை ஆளுநர் நிராகரித்துவிட்டு, புதிதாக பரிந்துரை வழங்க உத்தரவிடுகிறார். தமிழ் தெரியாத, வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை எல்லாம் பல்கலைக் கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அண்ணா பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக் கழகம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் என்று வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் துணை வேந்தர்களாக நியமிக்கப்படுவது தொடர்கிறது.

துணை வேந்தராக ஒரு வன்னியர் கூட இல்லை… ராமதாஸ் கொந்தளிப்பு!
இந்த நிலையில் வன்னியர் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை என்று சமூக அநீதி என்று கண்டித்துள்ளார் ராமதாஸ். இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் 21 அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக அவற்றில் ஒரு பல்கலைக்கழகத்தில் கூட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்படவில்லை. தகுதியானவர்கள் ஏராளமாக இருந்தும் புறக்கணிப்பு தொடர்கிறது.

http://


அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அடுத்த மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்து துணைவேந்தர் நியமிக்கப்படுகிறார். உள்ளூரில் வன்னியர் சமுதாயத்தில் தகுதியான பேராசிரியர்கள் இருந்தும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதுவா சமூக நீதி? இந்த அநீதி முடிவுக்கு வருவது எப்போது?” என்று கூறியுள்ளார்.