“பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை” : அமைச்சர் செங்கோட்டையன்

“பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை” : அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

“பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை” : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மற்றும் பாடத்திட்டம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார். பள்ளிக்கல்வித்துறை செயலர் தீரஜ் குமார், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

“பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை” : அமைச்சர் செங்கோட்டையன்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை. பள்ளிகள் திறப்பது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்வர் தான் அறிவிப்பார்.நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்க பள்ளிகல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பாடத்திட்டங்கள் குறைப்பதற்கான ப்ளூ பிரிண்ட் மாணவர்களுக்கு அளிப்பது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு 10 நாட்களுக்குள் அறிவிப்பு வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.