மத்திய அரசு பதிலளிக்காததால் நீதிபதிகள் எடுத்த அதிரடி முடிவு

 

மத்திய அரசு பதிலளிக்காததால் நீதிபதிகள் எடுத்த அதிரடி முடிவு

பெகாசஸ் விவகாரம் குறித்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது . அப்போது பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் ஒட்டு கேட்கப் பட்டதா இல்லையா என்று கேள்விக்கு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்பது குறித்து தற்போது வெளிப்படையாக தெரிவிக்க முடியாது. ஏனென்றால் இது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்று சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

மத்திய அரசு பதிலளிக்காததால் நீதிபதிகள் எடுத்த அதிரடி முடிவு

உடனே குறுக்கிட்ட தலைமை நீதிபதி அமர்வு, குடிமக்களின் தனி உரிமை பாதிக்கப்படுகிறது என்பதற்கு அரசின் பதில் என்ன ? தேச பாதுகாப்பு தவிர்த்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் ஒட்டு கேட்க பட்டிருக்கிறார்கள் என்ற புகாருக்கான பதில் என்ன? என்று கேள்வி எழுப்பினர்.

ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தி அதன் பின்னர் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பெகாசஸ் என்பது சட்டவிரோத உளவு மென்பொருள். அதை பயன்படுத்தி குடி மக்களுக்கு எதிராக பயன்படுத்தி இருப்பது மிக மோசமானது. அது குறித்து வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என்று அரசு கூற முடியாது என என்.ராம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.

அரசு உண்மையை முழுமையாக மறைக்க முயல்கிறது . அதனால்தான் அரசு குழு அமைத்து விசாரிப்பதாக சொல்கிறது . ஆகவே, அரசு குழுவை அமைக்கும் முடிவை ஏற்க கூடாது என்று கபில்சிபல் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்பு மட்டுமல்ல தவறான தகவல்களை குடிமக்களின் தொலைபேசியில் கொண்டு சேர்க்கவும் முடியும். இது ஆபத்தானது. ஆகவே எந்த வகையிலும் பெகாசஸ் பயன்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது என்று மற்ற வழக்கறிஞர்களும் வாதிட்டனர்.

இந்த விவகாரத்தில் அரசு மீது நம்பிக்கை இல்லை. அரசு அமைக்கும் குழுவையும் ஏற்க முடியாது. உச்சநீதிமன்றமே நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து நீதிபதிகள் பேசியபோது , அரசு பதிலளிக்க முன் வராத நிலையில் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றனர்.