‘மீண்டும் லாக்டவுன் இல்ல’.. சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு!

‘மீண்டும் லாக்டவுன் இல்ல’.. சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக டெல்லி, தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. டெல்லியில் ஒரே நாளில் 1500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் அங்கு மீண்டும் லாக் டவுன் போடப்படுமா என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.

‘மீண்டும் லாக்டவுன் இல்ல’.. சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு!

இந்த நிலையில் லாக்டவுன் குறித்து விளக்கம் அளித்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு இல்லை. அதை பற்றி முடிவு செய்யவிலை. கடந்த ஆண்டு லாக் டவுன் போடப்பட்டதற்கு பல காரணம் இருந்தது. அச்சமயம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியுமென்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டதால் லாக்டவுன் அமல்படுத்தினோம். ஆனால், கொரோனா கட்டுக்குள் வரவில்லை. லாக்டவுன் கொரோனாவுக்கு தீர்வாகாது என்று தெரிவித்துள்ளார்.

‘மீண்டும் லாக்டவுன் இல்ல’.. சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு!

தொடர்ந்து பேசிய அவர், கொரோனாவுடன் வாழ மக்கள் பழகிக் கொள்ள வேண்டும். உடனடியாக சரியாக வாய்ப்பு இல்லை. எனவே மக்கள் எல்லாரும் கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.