“சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை – டெல்லியில் முதல்வர் பழனிசாமி பேட்டி!

“சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை – டெல்லியில் முதல்வர் பழனிசாமி  பேட்டி!

தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுமாறு பிரதமரிடம் அழைப்பு விடுத்தேன் என்று முதல்வர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

“சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை – டெல்லியில் முதல்வர் பழனிசாமி  பேட்டி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக டெல்லி சென்றார். அங்கு நேற்றிரவுமத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த முதல்வர் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடனான தொகுதி பங்கீடு குறித்து பேசினார். இதை தொடர்ந்து இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி இல்லத்தில் மோடியை சந்தித்து பேசினார்.

“சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை – டெல்லியில் முதல்வர் பழனிசாமி  பேட்டி!

இதை தொடர்ந்து தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்த நிலையில், “தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு, முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்துவைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன்; புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் அழைப்பு விடுத்தேன். வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் மெட்ரோ ரயில்சேவை தொடக்க விழாவுக்கு பிரதமரை அழைத்தேன். முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்து வைக்க அழைப்பு விடுத்தேன்; அதனை பிரதமர் ஏற்றுள்ளார். காவிரி குண்டாறு இணைப்பு திட்டம், கல்லணை சீரமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமரை அழைத்தேன். இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளை மீட்கக்கோரி பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். எனது கோரிக்கையை ஏற்று இலங்கை சிறையில் இருந்து, 40 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். துறைவாரியான கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் மனுக்கள் அளித்துள்ளேன். எனது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். அதேபோல் நிவர், புரெவி புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க பிரதமரிடம் வலியுறுத்தினேன் என்றார்.

“சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை – டெல்லியில் முதல்வர் பழனிசாமி  பேட்டி!

தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் பேசவில்லை என்றும் சசிகலா வருகையால் மாற்றம் ஏற்படாது. ஜெயலலிதா இருக்கும் போது சசிகலா அதிமுகவில் இல்லை. அதனால் சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.