“ஏழைகளுக்கு ஒரு நீதியும் பணக்காரர்களுக்கு ஒரு நீதியும் இருக்க முடியாது” – கிழித்தெடுத்த உச்ச நீதிமன்றம்!

“ஏழைகளுக்கு ஒரு நீதியும் பணக்காரர்களுக்கு ஒரு நீதியும் இருக்க முடியாது” – கிழித்தெடுத்த உச்ச நீதிமன்றம்!

மத்தியப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராம்பாய் சிங்கின் கணவர் கோவிந்த் சிங். 2 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் காங்கிரஸ் பிரமுகர் தேவேந்திர சவுரேஸ்யா கொல்லப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் கோவிந்த் சிங் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இவருக்கு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து இந்த ஜாமினை ரத்து செய்யக் கோரி, தேவேந்திர சவுரேஸ்யாவின் மகன் சோமேஷ் சவுரேஸ்யா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

“ஏழைகளுக்கு ஒரு நீதியும் பணக்காரர்களுக்கு ஒரு நீதியும் இருக்க முடியாது” – கிழித்தெடுத்த உச்ச நீதிமன்றம்!

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவிந்த் சிங்கிற்கு வழங்கிய ஜாமினை ரத்துசெய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். கோவிந்த் சிங்கை வேறு சிறைக்கு மாற்ற கூறி உத்தரவிட்ட நீதிபதிகள், ஜாமின் வழங்கிய உயர் நீதிமன்றம் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தனர். அப்போது பேசிய நீதிபதிகள், “நம் நாட்டில் ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பாக இருப்பது சுதந்திரமான, யாருக்கும் பாரபட்சமில்லாத அமைப்பாக இருக்கும் நீதித்துறை தான்.

“ஏழைகளுக்கு ஒரு நீதியும் பணக்காரர்களுக்கு ஒரு நீதியும் இருக்க முடியாது” – கிழித்தெடுத்த உச்ச நீதிமன்றம்!
கோவிந்த் சிங்

அரசியல் அழுத்தங்கள் வந்தாலும் நீதித்துறை எப்போதும் தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் இருவிதமான நீதி முறைகள் என்றைக்கும் இருக்கவே முடியாது. பணக்காரர்களுக்கான, வளமையானவர்களுக்கான, அரசியல் அதிகாரம் கொண்டவர்களுக்கென ஒரு நீதியும், எந்த பலமும் இல்லாத ஏழைகளுக்கென ஒரு நீதியும் நிச்சயமாக இருக்க கூடாது. நீதித்துறையின் செயல்பாடு என்பது, அதிகாரங்களைப் பறிக்கும் ஒரு வேர் போன்ற அமைப்பாக இருக்க வேண்டும்.

“ஏழைகளுக்கு ஒரு நீதியும் பணக்காரர்களுக்கு ஒரு நீதியும் இருக்க முடியாது” – கிழித்தெடுத்த உச்ச நீதிமன்றம்!
தேவேந்திர சவுரேஸ்யா

நீதிபதிகள் எந்தவிதமான தயக்கமின்றி நெஞ்சுறுதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டும். நீதித்துறைக்கும் நீதிபதிக்கும் சுதந்திரம் என்பது முக்கியமானது. ஜனநாயக நாட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும். நீதித்துறையின் புனிதத் தன்மையைப் பாதுகாக்க மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தவறிவிட்டது. கொலைக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கும்போது ஆதாரங்களை ஆய்வு செய்ய தவறிவிட்டது” என்றனர்.