“நீட் பயிற்சி தரும் அளவுக்கு அரசுப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை” : அமைச்சர் செங்கோட்டையன்

“நீட் பயிற்சி தரும் அளவுக்கு அரசுப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை” : அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசுப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

“நீட் பயிற்சி தரும் அளவுக்கு அரசுப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை” : அமைச்சர் செங்கோட்டையன்

மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வில் வெற்றிபெற முடியாமல் மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு தள்ளப்படுகிறார். இதற்கான பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்க பல மாணவர்களுக்கு போதிய வசதி இல்லை. இதனால் தமிழக அரசு சார்பில் இலவசமாக நீட் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகிறது. கொரோனா காலம் என்பதால் நீட் பயிற்சி வகுப்புகள் ஆன்லைனில் நடந்து வருகிறது. ஆனால் தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையிலும் இன்னும் இந்த வகுப்புகள் நேரடி பயிற்சி வகுப்புகளாக ஆரம்பிக்கப்படவில்லை.

“நீட் பயிற்சி தரும் அளவுக்கு அரசுப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை” : அமைச்சர் செங்கோட்டையன்

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “மத்திய அரசின் நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இல்லை. அரசுப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை ; அதனால்தான் தனியார் மூலம் ஆன்லைனில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது. நீட் தேர்வு பயிற்சிக்கு 21ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5 ஆயிரத்து 800 பேர் மட்டுமே இலவச பயிற்சி எடுக்கின்றனர். கல்வி டிவி மூலம் பயின்ற மாணவர்களின் கல்வித் தரம் பற்றி ஆராய திறனாய்வுத் தேர்வு பணி நடக்கிறது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து அறிவிக்கப்படும் என்றார்.