இரவு 9 மணிக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது ஏன்? தென்காசியில் விவசாயி உயிரிழந்த வழக்கில் நீதிமன்றம் கேள்வி

 

இரவு 9 மணிக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது ஏன்? தென்காசியில் விவசாயி உயிரிழந்த வழக்கில் நீதிமன்றம் கேள்வி

தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த வாகைகுளத்தை சேர்ந்த அணைக்கரைமுத்து (76) என்பவர், தன் தோட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைத்து இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் அவரை விசாரிக்க, கடையம் வன சரக அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். அப்போது முத்து மின்வேலி அமைத்ததை ஒப்புக்கொண்டு, அபராதம் செலுத்த சம்மதித்ததாக தெரிகிறது. விசாரணையின் போது அதிகாரிகளிடம் முத்து நெஞ்சு வலிப்பதாக கூறியதால் அவர் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர் அங்கு உயிரிழந்தார்.

இரவு 9 மணிக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது ஏன்? தென்காசியில் விவசாயி உயிரிழந்த வழக்கில் நீதிமன்றம் கேள்வி

ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளாத முத்துவின் குடும்பத்தினர், வனத்துறை அதிகாரிகள் விசாரணையில் அவரை தாக்கியதால் தான் உயிரிழந்ததாக புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே முத்து மரண விவகாரத்தில் மூத்த தடயவியல் மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்யக்கோரி முத்துவின் மனைவி பாலம்மாள் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த நிலையில், அந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது இரவு 9 மணிக்கு முத்துவின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சட்ட ஒழுங்கு பிரச்னையை தவிர்க்கவே உடற்கூராய்வு விரைவாக செய்யப்பட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், விவசாயி முத்துவின் உடற்கூராய்வு அறிக்கை மற்றும் வீடியோ பதிவுடன் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.