போலீஸ் பறிமுதல் செய்த செல்போனை திருப்பி தரக்கோரி, இளம்பெண் சாலையில் அமர்ந்து போராட்டம்

 

போலீஸ் பறிமுதல் செய்த செல்போனை திருப்பி தரக்கோரி, இளம்பெண் சாலையில் அமர்ந்து போராட்டம்

தேனி

போலீசார் பறிமுதல் செய்த செல்போனை திருப்பி அளிக்கக்கோரி, தேனியில் காவல் நிலையம் முன்பு இளம்பெண் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் கல்லூரி மாணவி திவ்யா. இவர் டிக்டாக் செயலில் கார்த்திக் என்ற காதலனை தேடுவதாக கூறி, வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். இந்த நிலையில், டிக்டாக்கில் அறிமுகமான நண்பர்களுக்காக, தேனி மாவட்டம் நாகலாபுரம் சுகந்தி என்பவருக்கு எதிராக ஆபாசமாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். இதுகுறித்து சுகந்தி அளித்த புகாரின் பேரில் தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி காவல்நிலைய போலீசார் அவரை கைதுசெய்து, செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

போலீஸ் பறிமுதல் செய்த செல்போனை திருப்பி தரக்கோரி, இளம்பெண் சாலையில் அமர்ந்து போராட்டம்

இந்த நிலையில், சுகந்தி தன்னை யூடியுப் சேனலுக்கு பேட்டி எடுப்பதாக கூறி ஆட்களை வைத்து கடத்திச்சென்று தாக்கியதாக, திவ்யா பதிலுக்கு புகார் ஒன்றை அளித்தார். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட தனது செல்போனை திரும்ப வழங்க கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் காவல்துறையினர் செல்போனை வழங்க மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த திவ்யா காவல்நிலையத்தின் எதிரே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், போலீசாரை கண்டித்து கோஷமிட்ட அவர் பின்னர், அங்கிருந்து புறப்பட்டு சென்றனார். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.