ஓய்வூதிய பலன்களை வழங்கக்கோரி அரசுப்பேருந்து ஓட்டுநர் போராட்டம்

 

ஓய்வூதிய பலன்களை வழங்கக்கோரி அரசுப்பேருந்து ஓட்டுநர் போராட்டம்

தேனி

தேனியில் ஓய்வூதிய பலன்களை வழங்கக்கோரி அரசுப்பேருந்து ஓட்டுநர் ஒருவர், போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மாவட்டம் அரண்மனைபுதூர் பிரிவை சேர்ந்தவர் வடிவேல்(59). இவர் தேனி அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக கடந்த 28 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உடல்நல குறைவு காரணமாக வடிவேலு, கடந்த 6 மாதங்களாக பணிக்கு செல்லாததாக கூறப்படுகிறது. அத்துடன் கடந்த ஜூலை மாதத்துடன் வடிவேலுக்கு 58 வயது பூர்த்தி அடைந்துள்ளது.

ஓய்வூதிய பலன்களை வழங்கக்கோரி அரசுப்பேருந்து ஓட்டுநர் போராட்டம்

இதனிடையே, தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு பணி நீடிப்பு வழங்கியதால், போக்குவரத்துக் கழக நிர்வாகம் வடிவேலுவை மீண்டும் பணியை தொடர வலியுறுத்தி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வடிவேலு, தனது உடல்நிலை குறித்து மருத்துவ சான்றிதழை நிர்வாகத்திற்கும், முதலமைச்சருக்கும் வழங்கிய நிலையில், இதுவரை எந்த பதிலும் அளிக்காததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த வடிவேலு, இன்று காலை ஓய்வுபெற்றதற்கான பணத்தை வழங்கக் கோரி தேனி அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக தரையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.