சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய தேனி ஆட்சியர்!

 

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய தேனி ஆட்சியர்!

தேனி

போடி அருகே சாலை விபத்தில் சிக்கிய இருவரை, அந்த வழியாக சென்ற தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மீட்டு, அரசு வாகனத்தில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.

தேனி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக க.வீ.முரளிதரன் சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்று கொண்டார். இந்த நிலையில், நேற்று போடி அருகேயுள்ள முந்தல் கிராமத்தில் காய்ச்சல் பரிசோதனை முகாமினை பார்வையிடுவதற்காக காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய தேனி ஆட்சியர்!

போடி அடுத்த கோடாங்கிபட்டி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு, 2 இருசக்கர வாகனங்கள் நேர்க்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது தெரிய வந்தது. இந்த விபத்தில், வாகனத்தில் வந்த 2 பேர் படுகாயமடைந்து சாலையில் விழுந்து கிடந்ததை பார்த்த ஆட்சியர் முரளிதரன், உடனடியாக வாகனத்தை நிறுத்தி, விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தார்.

தொடர்ந்து, அவர்கள் இருவரையும் அரசு ஜீப்பில் ஏற்றி தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இதனை தொடர்ந்து, ஆட்சியர் தனது காரில் புறப்பட்டு சென்றார். விபத்தில் சிக்கியவர்களுக்கு ஓடோடி உதவிய ஆட்சியரின் செயல் பொதுமக்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.