தேனியில் 26ம் தேதி வரை முழு கடையடைப்பு! – வியாபாரிகள் சங்கம் அதிரடி

 

தேனியில் 26ம் தேதி வரை முழு கடையடைப்பு! – வியாபாரிகள் சங்கம் அதிரடி

கொரோனா பரவலைத் தடுக்க தேனியில் வருகிற 26ம் தேதி வரை கடையடைப்பை மேற்கொள்ள உள்ளதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
மதுரை, தேனியில் உள்ளூர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இன்றுடன் அந்த ஊரடங்கு முடிவடைகிறது. அரசு தரப்பில் இதுவரை நீட்டிப்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. என்ன திட்டம் என்றும் தெரியவில்லை. கொரோனா நாளுக்கு நாள் அதிகரிப்பதால் தேனி வியாபாரிகளே முன்வந்து கதவடைப்பு நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

தேனியில் 26ம் தேதி வரை முழு கடையடைப்பு! – வியாபாரிகள் சங்கம் அதிரடிதேனி மாவட்ட வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது. அந்த கூட்டத்திற்கு செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மளிகைக் கடை, அரிசி ஆலை, உணவுப் பொருள், ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வருகிற 26ம் தேதி வரை அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து மற்ற கடைகளை மூடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

தேனியில் 26ம் தேதி வரை முழு கடையடைப்பு! – வியாபாரிகள் சங்கம் அதிரடிதேனி மாவட்டத்தில் 1863 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 670 பேர் குணமடைந்துள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். தினமும் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகி வரும் நிலையில் இந்த முடிவை எடுத்திருப்பதாக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.