கொரோனா பாதித்தவர்களின் வீடுகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல்

 

கொரோனா பாதித்தவர்களின் வீடுகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல்

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு சென்றவர்களின் பூட்டப்பட்ட வீடுகளை குறி வைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் சென்னையில் அரங்கேறிவருகிறது.

சென்னை மடிப்பாக்கம் அடுத்த கார்த்திகேயபுரம், இரண்டாவது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தனியார் வங்கி மேலாளர் நவநீத கண்ணன் இவரது மனைவி சரஸ்வதி கண்ணன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த 5ம் தேதி முதல் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 9 சவரன் தங்க நகைகள், வைரக்கல் மோதிரம் ஒன்று கொள்ளை போனது தெரியவந்தது.

கொரோனா பாதித்தவர்களின் வீடுகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல்

இது குறித்து மடிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுக்கபட்டதையடுத்து, நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கொரோனா வீடென்றும் பாராமல் துணிச்சலுடன் கொள்ளையடிக்கும் கும்பலால் அப்பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.