திரையரங்குகள், மால்கள் 50% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி!

 

திரையரங்குகள், மால்கள் 50% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி!

கொரோனா ஊரடங்கில் 5வது கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது.

கொரோனா நோய்த் தொற்று உலக மக்களை வாட்டி எடுத்துவருகிறது. மார்ச் மாதம் முதல் இந்தியாவில் நோய்த் தொற்று பரவுவத் தொடங்கியது. அதனால், அம்மாத இறுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுக்க அனைத்து வகை வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. 4 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் திறக்கப்படாததால் அதனை ஒட்டிய ஏராளமான தொழில்கள் முடங்கின.

திரையரங்குகள், மால்கள் 50% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி!

இந்நிலையில் 5 ஆவது ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதிக்கலாம் என்று, மத்திய அரசு தெரிவித்துள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் மால்கள் 50% பார்வையாளர்களுடன் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அக். 15ம் தேதி முதல் விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கான நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியது.பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து கல்வித்துறை முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அக்.31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.