Home உலகம் உலகம் முழுவதும் பரவும் “வாரத்திற்கு 4 நாள் வேலை” திட்டம்

உலகம் முழுவதும் பரவும் “வாரத்திற்கு 4 நாள் வேலை” திட்டம்

இந்தியாவைப் பொறுத்தவரை வாரத்தில் 5 நாள் வேலை அல்லது 6 நாள் வேலை என்பது நடைமுறையில் உள்ளது. இதில் தினசரி வேலை நேரம் 8 மணி நேரமாகும். இதன்படி ஒருவர் வாரத்தில் 5 நாள் வேலை செய்தால் அவர் மொத்தம் 40 மணி நேரமும், 6 நாள் வேலை செய்தால் 48 மணி நேரமும் பணி புரிகிறார். இந்தியர்களுக்கு பெரும்பாலும் சனி மற்றும் ஞாயிறு அல்லது ஞாயிறு விடுமுறை தினமாக இருக்கிறது.
இதுவே 1920 மற்றும் 1930 கால கட்டங்களில், சராசரியாக நாள் ஒன்றுக்கு 10 முதல் 16 மணி நேரம் வரையும், வாரத்தில் கட்டாயமாக 6 நாட்களும் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இதன் பின்னர் 1980 களில் 6 நாள் பணியுடன் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை என்பது செயல்திறனை

அதிகப்படுத்துகிறது என்பதை கண்டறிந்தனர். 40 மணி நேரம், ஐந்து நாள் வேலை. 40 மணி நேரம் என்பது 2008-க்கு பிறகுள்ள முடிவாகும்.
தற்போது கொரோனாவால் உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை தலைகீழாய் மாறி, வேலையில்லா திண்டாட்டம் உயர்ந்து வரும் நேரத்தில், உலகெங்கிலும் உள்ள பெருமுதலாளிகளும், தொழிலதிபர்களும் செலவைக் குறைத்து உற்பத்தி திறனை அதிகரிக்க பல்வேறு வேலை மாதிரிகளை முயற்சி செய்து வருகின்றனர்.வீட்டில் இருந்து வேலை பார்த்து வருவது தற்போது புதிய இயல்பு வாழ்க்கை என்று ஆகிவிட்ட நிலையில் உலகம் முழுவதும், லட்சக்கணக்கான நிறுவனங்கள் அதனை ஆதரிக்கத் தொடங்கியுள்ளன.
இதில், “வாரத்தில் நான்கு நாள் வேலை” என்ற புதிய திட்டம் உலகம் முழுவதும் வெகு வேகமாகப் பரவி வருகிறது. பல உலகத் தலைவர்களும் தொழிற் சங்கங்களும் நான்கு நாள் வேலை வாரத்தை முன் மொழிந்துள்ளன. இதன்படி ஒருவர் வாரத்திற்கு 32 மணி நேரம் வேலை செய்வார்.அப்படிக் குறைவான நேரம் ஒருவர் வேலை செய்தாலும் அவருக்கு அதே அளவு சம்பளம் வழங்கப்படும்.


சமீபத்தில்,பிரபல “மைக்ரோசாப்ட்” நிறுவனம் ஜப்பானில் உள்ள தனது அலுவலகங்களில் ‘நான்கு நாள் வேலை வாரம்’ மாதிரியை சோதனை செய்தது. இதில் ஊழியர்கள் மிக்க மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தோடு மட்டுமல்லாமல் கணிசமான அளவு அதிக உற்பத்தி திறனையும் அளித்துள்ளனர் என்று கண்டறிந்தது. ஊழியர்கள் மீது அக்கறை கொண்டு தங்களுக்கு வேலை நேரம் குறைக்கப்பட்டதால் அவர்கள் நிறுவனம் மீது கூடுதல் விசுவாசம் கொள்கின்றனர் என்பதும் தெரிய வந்தது.
அந் நிறுவனத்தின் 2 ஆயிரத்து300 பணியாளர்களுக்கு சம்பளத்தைக் குறைக்காமல் தொடர்ச்சியாக 5 வெள்ளி, சனி, ஞயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டது. இதில் உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளது. இது தவிர, ஊழியர்கள் 25 சதவீதம் குறைவான நேரத்தை எடுத்துக் கொண்டதாகவும், மின்சார பயன்பாடும் 23 சதவீதம் குறைந்துவிட்டதாகவும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. மொத்த பணியாளர்களில் குறைந்தது 92 சதவீதம் பேர் குறுகிய வாரத்தை வரவேற்றனர் என்று கூறியது.
முறையான வருகைப் பதிவை கையாளுதல் மற்றும் அலுவலகங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற விசயங்களில் சிக்கல்கள் மற்றும் வாடகை, மின்சார பில்கள் மற்றும் பிற செலவுகளை குறைத்து முதலாளிகளின் சுமையை குறைக்கிறது என்பதால் இந்த நான்கு நாள் வார வேலைத் திட்டம் வளர்ந்து வருகிறது.
‘வாஷிங்டன் போஸ்ட்’ அறிக்கையின்படி, உற்பத்தித்திறன் மற்றும் பணியாளர் திருப்தி ஆகிய இரண்டையும் இந்த திட்டம் கணிசமாக உயர்த்தியுள்ளன எனப்பல ஆய்வுகள் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. நான்கு நாள் வேலை வாரத்திற்கு மாற வேண்டும் என்று கூறி வரும் உலக தலைவர்களில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அடெர்ன் மற்றும் ரஷ்ய பிரதமர் ட்மிட்ரி மெத்வதேவ் ஆகியோரும் அடங்குவர்.


நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அடெர்ன், நான்கு நாள் வேலை மாதிரிகளை நாட்டில் இருக்கும் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.”நீங்கள் ஒரு முதலாளியாக இந்த நான்கு நாள் வேலை வாரத்தை நிறைவேற்றும் நிலையில் இருந்தால் அதை நான் ஊக்குவிக்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்


ரஷ்ய பிரதமர் மெத்வதெவ், நான்கு நாள் வேலை வாரம் தொழிலாளர்கள் நாட்பட்ட சோர்வவினை சமாளிக்க உதவும் என்று பரிந்துரை செய்ததாக மாஸ்கோ டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ‘கூகுள்’ இணை நிறுவனர் லாரி பேஜ் உட்பட பல உயர் அதிகாரிகள் நான்கு நாள் வேலை வாரத்திற்கு ஆதரவாக உள்ளனர். இதற்கிடையே கடந்த ஆண்டு இங்கிலாந்து பொதுத் தேர்தலின் போது, தொழிற்கட்சி ஊதிய இழப்பு இல்லாமல் நான்கு நாள், 32 மணி நேர வேலை வாரத்தை அறிமுகப்படுத்த முடியும் என்று கூறியது
அயர்லாந்தில், தொழிற்சங்கங்கள், ஆர்வலர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கூட்டாக இணைந்து நான்கு நாள் வேலை வாரத்தை உறுதி செய்யும் வகையில் புதிய வழிகளை கண்டறிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில்,உலகம் முழுவதும் நான்கில் மூன்று பேர் நான்கு நாள் வேலை வாரத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

‘பாஸான 70% பேர் மீண்டும் மீண்டும் நீட் தேர்வு எழுதியவர்கள்’: கல்வியாளர்கள் அதிருப்தி!

தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான...

விபத்தில் இறந்த ராணுவ வீரர் உடல் காஞ்சிபுரம் வந்தடைந்தது!

அசாமில் சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் ஏகாம்பரம் உடல் சொந்த ஊரான காஞ்சிபுரம் வந்தடைந்தது. காஞ்சிபுரம் வெள்ளை...

“கொட்டும் ரத்தத்தோடு ,முனகல் சத்தத்தோடு …”-பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கிடந்த பெண் நாய்

மும்பையின் போவாய் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குள் ‘நூரி’ என்ற எட்டு வயது பெண் நாய் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கிடந்தது .

சென்னை திநகர் நகைக்கடையில் கொள்ளை : திருவள்ளூர் கொள்ளையனின் காதலியிடம் விசாரணை!

சென்னை தி.நகர் நகைக்கடையில் கொள்ளையடித்தது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை தி.நகரில் உள்ள மூசா தெருவில் இயங்கி வந்த உத்தம் நகைக் கடையில்...
Do NOT follow this link or you will be banned from the site!