`12,500 ரூபாய்க்கு 2000 ரூபாய் நோட்டு வேண்டும் சார்!’- வங்கியில் புகுந்து கேஷியரை அதிரவைத்த பெண்

 

`12,500 ரூபாய்க்கு 2000 ரூபாய் நோட்டு வேண்டும் சார்!’- வங்கியில் புகுந்து கேஷியரை அதிரவைத்த பெண்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கேட்டு வங்கிக்கு வந்த பெண், வங்கி கேஷியரை ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்துவிட்டு பைக்கில் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் காங்கயம் சாலையில் வீரக்குமார சுவாமி கோயில் இருக்கிறது. இந்த கோயில் பின்புறம் இந்தியன் வங்கி கிளை நீண்ட நாட்களாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், வங்கியில் நுழைந்த பெண் ஒருவர், நேராக கேஷியரிடம் சென்று 12, 500 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து தனதுக்க 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து, அந்த கேஷியர், அந்த பெண்ணிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளார். பின்னர் திடீரென்று இந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தனக்கு வேண்டும் என்று கூறியதோடு, ரூபாய் நோட்டுகளை மடித்து கொடுத்துள்ளார்.

இதையடுத்து, தான் கொடுத்த 12,500 ரூபாய் பணத்தை 500 ரூபாய் நோட்டுகளாக வாங்கிக் கொண்டு அவசரமாக வெளியேறிவிட்டார். இதன் பின்னர் அந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கேஷியர் எண்ணியுள்ளார். அப்போது, மூன்று 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வங்கியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, பணத்தை கொள்ளையடித்து சென்ற பெண், இரண்டு பேருடன் பைக்கில் ஏறி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

வங்கியில் புகுந்த கேஷியரை ஏமாற்றி பெண் ஒருவர் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.