கண்டு கொள்ளாத அரசு நிர்வாகம்.. கால்வாய் மீது சொந்தமாக மரப்பாலம் கட்டும் கிராமவாசிகள்

 

கண்டு கொள்ளாத அரசு நிர்வாகம்.. கால்வாய் மீது சொந்தமாக மரப்பாலம் கட்டும் கிராமவாசிகள்

ஒடிசாவில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அரசு நிர்வாகம் கண்டு கொள்ளதால், கிராமவாசிகள் தாங்களாகவே கால்வாய் மீது மரப்பாலம் கட்டி வருகின்றனர்.

ஒடிசா மாநிலம் பலாங்கீர் மாவட்டத்தின் திதிலகர் ஒன்றியத்தில் வனப்பகுதியில் அமைந்துள்ள கிராமம் குதுரகெந்தா. இந்த கிராமம் 3 கால்வாய்களால் சூழப்பட்டுள்ளது. வருடத்தில் 6 மாதம் இந்த கால்வாய்களில் நீரோட்டம் இருக்கும். கால்வாயை கடந்தால் சாலைக்கு செல்ல முடியும். மழைக்காலம் வந்தால் இந்த கால்வாய்களில் நீர்மட்டம் சுமார் 6 அடி வரை உயரும். இதனால் 3 மாதங்கள் (மழைக்காலம்) அந்த கிராமத்தினர் பெரும் நெருக்கடியை சந்திக்கின்றனர்.

கண்டு கொள்ளாத அரசு நிர்வாகம்.. கால்வாய் மீது சொந்தமாக மரப்பாலம் கட்டும் கிராமவாசிகள்
பாலம் அமைக்கும் பணியில் கிராமவாசிகள்

இது தொடர்பாக அந்த கிராமவாசிகள் கூறுகையில், மழைக்காலத்தில் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாது. மக்கள் தங்களது அடிப்படை தேவைகளை பெற தவறிவிட்டனர். மேலும் இந்த மாதங்களில் மருத்துவமனைக்கு செல்வது துண்டிக்கப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக குறைந்தபட்சம் ஒரு கால்வாய் மீதாவது பாலம் அமைக்க நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ.வின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். ஆனால் அனைத்தும் தோல்வி அடைந்தது. ஒவ்வொரு ஆண்டும் பாலம் கட்டுவதாக அரசாங்கம் உறுதிளிக்கிறது. ஆனால் பயனில்லை என தெரிவித்தனர்.

கண்டு கொள்ளாத அரசு நிர்வாகம்.. கால்வாய் மீது சொந்தமாக மரப்பாலம் கட்டும் கிராமவாசிகள்
மரபாலம் அமைக்கும் பணியில் கிராமவாசி

அரசாங்கம் பாலம் கட்டும் என்ற நம்பிக்கை இழந்த கிராமவாசிகள், நாமே பாலத்தை கட்டிவிடுவோம் என்று முடிவு செய்தனர். இதனையடுத்து கால்வாய் மீது பாலம் அமைக்க தேவையான மூங்கில் மற்றும் மர பலகைகளை அவர்களே சேகரித்தனர். உடனே பாலம் அமைக்கும் பணியை தொடங்கி விட்டனர். கிராமவாசிகளின் பாலம் கட்டும் முயற்சியை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தலைமை ஆலோசகர் ஆசித் குமார் திரிபாதி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கிராமவாசிகள் நல்ல செய்தியை வழங்கியுள்ளனர். அவர்களின் முயற்சியை பாராட்டுகிறேன். மரப்பாலம் தற்காலிகமானது. கால்வாய் மீது நிரந்த பாலம் விரைவில் கட்டப்படும் என தெரிவித்தார்.