உத்தர பிரதேசத்தில் லவ் ஜிஹாத்துக்கு எதிரான அவசர சட்டம்… மதம் மாறுவதாக இருந்தால் கலெக்டரிடம் தெரிவிக்க வேண்டும்

உத்தர பிரதேசத்தில் லவ் ஜிஹாத்துக்கு எதிரான அவசர சட்டம்… மதம் மாறுவதாக இருந்தால் கலெக்டரிடம் தெரிவிக்க வேண்டும்

உத்தர பிரதேசத்தில் லல் ஜிஹாத்தை குற்றமாக்கி புதிய அவசர சட்டத்தை அம்மாநில அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தின்படி, விருப்பத்துடன் மதம் மாறுவதாக இருந்தால் 2 மாதங்களுக்கு முன்பே மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பெண்ணை வேறொரு மதத்தை சேர்ந்த நபர் காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்த பிறகு அந்த பெண்ணை கட்டாயம் மதமாற்றம் செய்வது லவ் ஜிஹாத் என்று சொல்லப்படுகிறது. சமீபகாலமாக லவ் ஜிஹாத் விவகாரம் பெரிதாக வெடிக்க தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் லவ் ஜிஹாத் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உத்தர பிரதேச அரசு லல் ஜிஹாத்தை குற்றமாக்கி புதிய அவசர சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் லவ் ஜிஹாத்துக்கு எதிரான அவசர சட்டம்… மதம் மாறுவதாக இருந்தால் கலெக்டரிடம் தெரிவிக்க வேண்டும்
லவ் ஜிஹாத்

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அம்மாநில அமைச்சரவை நேற்று லவ் ஜிஹாத்தை குற்றமாக்கி புதிய அவசர சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்தின்படி, சிறுமிகள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தை சேர்ந்த பெண்களை கட்டாயம் மதமாற்றம் செய்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும். வெகுஜன மத மாற்றத்தை ஏற்பாடு செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மத மாற்றம் பலவந்தமாக மேற்கொள்ளப்படவில்லை அல்லது பொருத்தமற்ற வழிமுறைகளில் நடைபெறவில்லை என்பதை நிரூபிக்கும் பொறுப்பு, கட்டாய மதமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு உள்ளது. கட்டாய மதமாற்றம் பிணையில் வர முடியாத குற்றமாகும்.

உத்தர பிரதேசத்தில் லவ் ஜிஹாத்துக்கு எதிரான அவசர சட்டம்… மதம் மாறுவதாக இருந்தால் கலெக்டரிடம் தெரிவிக்க வேண்டும்
லவ் ஜிஹாத்துக்கு எதிராக அவசர சட்டம்

ஒரு நபர் விருப்பத்துடன் மத மாற்றம் செய்வதாக இருந்தாலும் மாவட்ட கலெக்டருக்கு 2 மாதங்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும். இந்த விதிமுறையை மீறினால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். கட்டாய மதமாற்றம் செய்தால் குற்றவாளிக்கு குற்றத்தின் தன்மையை பொறுத்து குறைந்த பட்சம் 1 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறையும், ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரமும் அபராதமும் விதிக்கப்படும்.