அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு தடை!

 

அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு தடை!

இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.

லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீனா ராணுவம் நடத்திய தாக்குதலை தொடர்ந்து டிக்டாக், ஹாலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. இதனால் அந்நிறுவனத்திற்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்த அமெரிக்கா, அந்நாட்டிலும் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்க ஆலோசித்துவருகிறது. டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலித்துவருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு தடை!

டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகள் பயனர்களின் தரவுகளை திருடுவதாகவும், சீன அரசுக்கு உளவு பார்ப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. விரைவில் டிக்டாக் செயலிக்கு தடை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவின் நடவடிக்கையால் திக்குமுக்காகி போகியிருக்கும் சீனா, தொடர்ந்து அமெரிக்காவும் தடை விதிக்க தயாராகியிருப்பது அந்நாட்டுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.