2001ல் கம்யூனிஸ்ட் வெளியேறும் போது வன்முறைகள் அரங்கேறியது போல் இப்போது நடக்கிறது.. பா.ஜ.க.

 

2001ல் கம்யூனிஸ்ட் வெளியேறும் போது வன்முறைகள் அரங்கேறியது போல் இப்போது நடக்கிறது.. பா.ஜ.க.

மேற்கு வங்கத்தில் 2001ம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியிலிருந்து வெளியேறும் போது வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது போல் தற்போது நடக்கிறது என சுவேந்து ஆதிகாரி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடந்து முடிந்த அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை தக்கவைத்து கொண்டது. தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த 2ம் தேதி முதல் அம்மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பா.ஜ.க. அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டது. வன்முறை சம்பவங்களில் 14 பேர் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரசும், பா.ஜ.க.வும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

2001ல் கம்யூனிஸ்ட் வெளியேறும் போது வன்முறைகள் அரங்கேறியது போல் இப்போது நடக்கிறது.. பா.ஜ.க.
தாக்குதல் நடந்த பா.ஜ.க. அலுவலகம்

மேற்கு வங்கத்தில் நிகழும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோற்கடிததவரும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான சுவேந்து அதிகாரி கூறியதாவது: நிலவரம் மிகவும் தீவிரமானது. நீண்ட காலமாக நான் அரசியலில் இருக்கிறேன். 2001ம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியேறும் போது இது போன்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டது. அந்த நேரத்தில் மம்தா பானர்ஜி 60 இடங்களில் வென்று இருந்தார். அப்போது சில பகுதிகளில் அரசியல் வன்முறை இருந்தது.

2001ல் கம்யூனிஸ்ட் வெளியேறும் போது வன்முறைகள் அரங்கேறியது போல் இப்போது நடக்கிறது.. பா.ஜ.க.
சுவேந்து ஆதிகாரி

ஆனால் தற்போது மாநிலம் முழுவதும் வன்முறை நிலவுகிறது. குறிப்பிட்ட சமுதாய மக்கள் தாக்கப்படுகின்றனர். நட்டா ஜி சொன்னது போல், நாடு பிரிவினையின்போது என்ன நிகழ்ந்ததோ அதே போன்ற நிலைமை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் வன்முறை அரங்கேறி வரும் இந்த நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில் மம்தா பானர்ஜி நேற்று முதல்வராக பொறுப்பேற்றார்.