அமைதியான போராட்டங்களுக்கு அனுமதி.. அதற்காக பொது இடங்களை ஆக்கிரமிப்பதை ஏற்க முடியாது.. உச்ச நீதிமன்றம்

அமைதியான போராட்டங்களுக்கு அனுமதி.. அதற்காக பொது இடங்களை ஆக்கிரமிப்பதை ஏற்க முடியாது.. உச்ச நீதிமன்றம்

ஹாஹீன் பாக் போராட்டம் தொடர்பான வழக்கில், அமைதியான போராட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் பொது இடங்களை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு நிலவியது. கடந்த டிசம்பரில் டெல்லி ஹாஹீன் பாக்கில் பெண்கள் இரவு, பகலாக போராட்டம் நடத்தினர். சாலை மற்றும் பொது இடங்களில் கூடாரங்களில் அமைத்து சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து இடையூறு மற்றும் மக்களுக்கு அசவுகரியம், வியாபாரிகளுக்கு பாதிப்பு, பலருக்கு வேலைவாய்ப்பு பறிபோனது.

அமைதியான போராட்டங்களுக்கு அனுமதி.. அதற்காக பொது இடங்களை ஆக்கிரமிப்பதை ஏற்க முடியாது.. உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த சூழ்நிலையில் ஹாஹீன் பாக் போராட்டத்துக்கு தடைவிதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. .இந்த வழக்கை விசாரணை செய்து வந்த உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அமைதியான போராட்டங்கள் ஜனநாயக செயல்முறையின் ஒரு பகுதியாக இருந்தாலும், ஷாஹீன் பாக் விவகாரத்தை போன்று பொது இடங்களை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அமைதியான போராட்டங்களுக்கு அனுமதி.. அதற்காக பொது இடங்களை ஆக்கிரமிப்பதை ஏற்க முடியாது.. உச்ச நீதிமன்றம்
ஹாஹீன் பாக் போராட்டம்

ஷாஹீன் பாக் போராட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் சில முக்கிய கருத்துகள்: போராட்டம் நடத்த அல்லது கருத்தை வெளிப்படுத்தவதற்காக எந்தவெரு நபரோ அல்லது குழுவோ பொது இடங்கள் அல்லது சாலைகளை ஆக்கிரமிக்க அனுமதி கிடையாது. இது போன்ற ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற வேண்டும். போராட்டங்கள அனுமதிக்கப்பட்ட இடங்களில் நடக்க வேண்டும். ஆர்ப்பாட்டக்காரர்கள் பொது இடங்கள் மற்றும் சாலைகளை ஆக்கிரமிப்பது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் மற்றும் அவர்களின் உரிமைகளை மீறுவதாகும், சட்டத்தின்கீழ் இதனை அனுமதிக்கப்படாது.

அமைதியான போராட்டங்களுக்கு அனுமதி.. அதற்காக பொது இடங்களை ஆக்கிரமிப்பதை ஏற்க முடியாது.. உச்ச நீதிமன்றம்
ஹாஹீன் பாக் போராட்டம்

அமைதியான போராட்டத்துக்கான உரிமை என்பது அரசியலமைப்பு உரிமை, அதனை மதிக்க வேண்டும். ஆனால் மக்கள் சுதரந்திர போராட்டத்தின்போது காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட வழிமுறைகளையும், எதிர்ப்பு முறைகளையும் மக்கள் பின்பற்ற வேண்டும் என்பது அர்த்தமல்ல. இன்றைய கால கட்டத்தில் சமூக ஊடகங்கள் மிகவும் துருவமுனைக்கப்பட்ட சூழ்நிலையை உருவாக்க பயன்படுத்தப்படலாம், இது ஹாஹீன் பாக் போராட்டங்களில் காணப்பட்டது.