வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!

 

வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!

ஸ்டெர்லைட் தற்காலிகமாக ஆலையை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர்.

தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு விசாரணையின் போது, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இடைக்காலமாக ஆலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!

ஆனால், ஆலையை திறக்க ஒரு போதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என தமிழக அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, விரிவான வாதத்தை முன் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் வாய்ப்பளிக்கவில்லை என வேதாந்தா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!

அதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் எதிர்ப்பை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க முடியாது எனக்கூறி வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தனர். மேலும், வழக்கமான நேரடி விசாரணை மேற்கொள்ளும் போது ஸ்டெர்லைட் கோரிக்கை பற்றி விசாரிக்கப்படும் என்றும் உத்தரவிட்டனர்.