வேளாண் சட்டங்களை அமல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு

 

வேளாண் சட்டங்களை அமல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு

வேளாண் சட்டங்களை அமல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடக்கோரிய பொது நல வழக்கில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம், விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம், 2020 தொடர்பான விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம், அத்தியாவசிய விளைபொருட்கள் (திருத்தம்) சட்டம் 2020 ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பஞ்சாபில் இந்த புதிய சட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களை அமல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு
உச்ச நீதிமன்றம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை தங்களது மாநிலத்தில் அமல்படுத்துவதை தவிர்க்க பஞ்சாபில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானங்கள நிறைவேற்றியது. காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தானிலும் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், மத்திய அரசு இயற்றிய புதிய வேளாண் சட்டங்களை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்து தர்ம பரிஷத் பொது நல வழக்கு தொடர்ந்தது.

வேளாண் சட்டங்களை அமல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு
பெட்ரோல் பங்குகளில் விவசாயிகள் போராட்டம்

இந்த பொது நல வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு விசாரித்தது. இறுதியில், இந்த மனுவில் தலையிட நாங்கள் மறுக்கிறோம். மன்னிக்கவும் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு தெரிவித்தது. புதிய வேளாண் சட்டங்களை கடுமையாக எதிர்வரும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு கூடுதல் பலத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.