‘உணவுப்பழக்கமே கொரோனாவிலிருந்து மீட்டது’ கொரோனாவை வென்ற கதை

 

‘உணவுப்பழக்கமே கொரோனாவிலிருந்து மீட்டது’ கொரோனாவை வென்ற கதை

கொரொனா குறித்த அபாயம் தரும் செய்திகளாக நிறைந்திருக்கும் இந்தச் சூழலில், அவ்வப்போது நம்பிக்கை தரும் செய்திகளும் வருகின்றன. சென்னையைச் சேர்ந்த ரமேசு பெரியார் என்பவர், தம் மகன் அம்பேத்கருக்கும் மனைவி அல்லிக்கும் கொரோனா பாசிட்டிவ் வந்து, அதிலிருந்து மீண்ட கதையைப் பதிவு செய்திருக்கிறார்.

அல்லியும் ,அம்பேத்கரும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர். 14 நாட்கள் தனிமைப்படுத்தலும் இன்றோடு நிறைவடைகிறது.

ஆம் 05.07.2020 அன்று அல்லிக்கு சிறிது காய்ச்சல் இருந்தது ஆனா அடுத்த நாளே குணமாகி இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டார்..இருந்த போதிலும் அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தியதால் எவ்வித அறிகுறியுமில்லாத அல்லிக்கு 11.07.2020 அன்று பரிசோதனை செய்யப்பட்டது அடுத்த நாள் 12.07.2020ல் தனது வழக்கமான பணிகளில் ஈடுபட்டார்.. மதிய உணவை நாங்கள் மூவரும் முடித்துவிட்டு “மனோகரன்” எனும் மலையாளப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தோம் சிறிது நேரத்தில் அல்லிக்கு பாசிடிவ் என்ற அதிர்ச்சி செய்தி மருத்துவமனையிலிருந்து வந்தது.‘உணவுப்பழக்கமே கொரோனாவிலிருந்து மீட்டது’ கொரோனாவை வென்ற கதை

 

எனக்குத்தான் எந்த அறிகுறியுமேயில்லையே வீட்டிலே என்னை நான் தனிமைபடுத்திக்கொள்ளட்டுமா என்று கேட்க…எனக்கு தெரிந்த சில மருத்துவ நண்பர்கள் மற்றும் கொரோனாவில் சிகிச்சை பெற்றவர்கள் அனனைவரையும் அழைத்து பேசிய பிறகு அல்லியை மருத்துவமனையில் அனுமதிப்பது என்ற முடிவுக்கு வந்தோம்..சுமார் 8.10 மணியளவில் அல்லிய ஆம்புலன்ஸ்ல ஏத்திவிட்டுட்டு நானும் அம்பேத்கரும் வீட்டுக்கு வந்துட்டோம். கொஞ்ச நேரத்திலே நல்ல மழை நானும் அம்பேத்கர் மட்டும் தான். அம்பேத்கர் பிறந்ததிலிருந்து அவுங்க அம்மாவை இரவு நேரத்தில் பிரிந்ததேயில்லை…இதுவே முதல் முறை. எப்புடி 14 நாட்கள் இவனை வைத்து சமாளிக்கப்போறோம்..அம்மா எங்கே என்று கேட்டு அழுதால்…? அவன் அழுகையை கட்டுப்படுத்த வெளிய கூட தூக்கிட்டு போக முடியாதே… ஆமா மாநகராட்சி ஊழியர்கள் இது தனிமைபடுத்தப்பட்ட வீடு என்று வீட்டு கதவில் பிட் நோட்டிஸ் ஒட்டிட்டாங்க….

2 நாள் கழித்து மாநகராட்சி ஊழியர்கள் வந்து அக்காவுக்கு பாசிடிவ் என்பாதால் நீங்க ரெண்டு பேரும் டெஸ்ட் எடுத்துக்கங்கண்ணா அதான் நடைமுறை என்றார்கள்..சரினு 13.07.20 அன்று நானும் அம்பேத்கரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டோம்..15.07.20 அன்று கொரோனா பரிசோதனையில் எனக்கு நெகடிவ் அம்பேத்கருக்கு பாசிடிவ்…!?

‘உணவுப்பழக்கமே கொரோனாவிலிருந்து மீட்டது’ கொரோனாவை வென்ற கதை

உடனே அம்பேத்கரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன்….அம்பேத்கரை பரிசோதித்த மருத்துவர் எவ்வித அறிகுறியுமில்லாமலிருப்பதால் வீட்டிலே வச்சு பாத்துகங்கனு சொல்லிட்டாங்க….

மருத்துவமனையிலிருந்த அல்லிக்கும் எவ்வித அறிகுறியுமில்லாமல் இருந்ததால் அவரும் வீட்டுக்கு வந்துட்டார்.

அல்லிக்கும், அம்பேத்கரும் பாசிடிவ்..நான் நெகடிவ்…இப்ப ஒரே வீட்ல நாங்க மூனு பேரும் சமூக இடைவெளியை கடைபிடித்து இருக்க வேண்டுமென்பது மருத்துவர்களின் ஆலோசனை…

1BHK என்று சொல்லக்கூடிய வீட்டில் ஒரே கழிவறை, அப்பா நெஞ்சில் படுத்தே பழக்கப்பட்ட 3 வயது அம்பேத்கர்… வீட்டுக்குள்ள எப்புடி மாஸ்க் போட்டுட்டே சுத்துறது.

உங்க ரெண்டு பேத்துக்கும் வந்த கொரோனா இனிமேல் எனக்கு வந்தா என்னா வராட்டினா என்ன… மாஸ்கும் போட வேனாம், சமூக இடைவெளியும் கடைபிடிக்க வேனாம்.. வந்தா பாத்துக்குவோம் என முடிவுக்கு வந்துட்டோம்.

காய்ச்சல் பார்க்கும் தெர்மா மீட்டர், பல்ஸ் பார்க்கும் மீட்டர் கொண்டு அவ்வப்போது அம்பேத்கரையும், அல்லியையும் பரிசோதிப்பேன்.

‘உணவுப்பழக்கமே கொரோனாவிலிருந்து மீட்டது’ கொரோனாவை வென்ற கதை

ஒரு நாளைக்கு இரண்டு முட்டை
கோழிக்கறி அல்லது மாட்டுக்கறி
கீரை
சுண்டல்
ஏதேனும் இரண்டு பழம் என்று நாங்கள் மூவரும் கடந்த 14 நாட்களாக சாப்பிட்டு வந்தோம்.

மாத்திரைகள் பெருசா எடுக்கவில்லை…காலையில் வெறும் வயிற்றில் கபசுர குடிநீர்..

14 நாட்களில் அல்லிக்கோ, அம்பேத்கருக்கோ ஏன் எனக்கோ கூட கொரோனாவிற்கான அறிகுறி குண்டு ஊசி முனையளவு கூட தென்படவில்லை.

கிராமங்களில் நல்லா மூக்கு பிடிக்க சாப்பிட்டுவிட்டு ஆட்டம் போடுபவர்களை என்னடா பேயா புடிச்சிருக்கு என்று கேட்பார்கள். கொரோனா பிடித்த அம்பேத்கரை ஏறக்குறைய அப்படி சொல்லலாம்.

எங்களின் உணவு பழக்கம் தான் எங்களை எவ்வித சேதாரமின்றி கொரோனாவிலிருந்து மீட்டெடுத்திருக்கிறது என்று நினைக்கின்றேன்.