திமுக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பாஜகவில் இணைந்தார்!

 

திமுக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பாஜகவில் இணைந்தார்!

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் திமுக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் இந்திரஜித் பாஜகவில் இணைந்தார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தற்போது தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தினார்.

திமுக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பாஜகவில் இணைந்தார்!

தொகுதி பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தை விரைவில் நடக்கவிருக்கும் சூழலில், பாஜக உறுப்பினர் சேர்க்கையில் தனி கவனம் செலுத்தி வருகிறது. அண்மையில் ஐபிஎஸ் அண்ணாமலை, குஷ்பு, மோகன் வைத்யா, காயத்ரி ரகுராம், நமீதா உள்ளிட்ட பலர் பாஜகவில் இணைந்த நிலையில், அவர்களுள் பலருக்கு பாஜகவில் முக்கிய பொறுப்புகளும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், திமுக முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும் இருந்த பரிதி இளம்வழுதியின் மகன் இந்திரஜித் எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்திருக்கிறார். இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.