பொதுக்குழுவுக்கு பிறகு நிலைமை சரியில்லை – புலம்பும் திமுகவினர்

 

பொதுக்குழுவுக்கு பிறகு நிலைமை சரியில்லை – புலம்பும் திமுகவினர்

பஞ்சமி நில உரிமை மீட்பு பிரச்சனையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘அசுரன்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த படத்தைப் பார்த்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின், அதைப் பாராட்டி சமூக வலைத்தளத்தில்
பதிவிட்டார். இதற்கு சுடச்சுட எதிர்வினையாற்றிய பாமக நிறுவனர்

பொதுக்குழுவுக்கு பிறகு நிலைமை சரியில்லை – புலம்பும் திமுகவினர்

ராமதாஸ்,’’ பாராட்டெல்லாம் இருக்கட்டும். அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று சென்னை முரசொலிஅலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை
சம்மந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என கூற, விவகாரம் வேகமெடுக்க ஆரம்பித்தது.

ராமதாஸின் இந்த பகீர் குற்றச்சாட்டைக் கையிலெடுத்த பாஜக பிரமுகர் மதுரை சீனிவாசன், அதை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். உடனே இது பற்றி ஸ்டாலினிடம் விசாரிக்க சம்மன் அனுப்பியது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்.

பொதுக்குழுவுக்கு பிறகு நிலைமை சரியில்லை – புலம்பும் திமுகவினர்

விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதற்காக ஸ்டாலின், நீதிமன்றம் சென்று தடை வாங்கினார் ஸ்டாலின். அத்துடன் முரசொலி அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ் பாரதி எழும்பூர் நீதிமன்றத்தில் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராமதாஸ் நேரில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிப்பதுடன், வழக்கையே ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அவரது சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்

பொதுக்குழுவுக்கு பிறகு நிலைமை சரியில்லை – புலம்பும் திமுகவினர்


மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் பேரில் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ராமதாசுக்கு விலக்கு அளித்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கை நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

பொதுக்குழுவுக்கு பிறகு நிலைமை சரியில்லை – புலம்பும் திமுகவினர்

அப்போது முரசொலி அறக்கட்டளை சார்பில் யாரும் ஆஜராகவில்லை. முரசொலி அறக்கட்டளை தொடர்பான முக்கியமான இந்த வழக்கில் யாரும் ஆஜராகாதது,
பலரையும் புருவம் உயர்த்தச் செய்திருக்கிறது. கட்சி தொடர்பாக நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு விசாரணைகளில் திமுக வழக்கறிஞர் அணி மிகவும் கவனம் செலுத்துவது வாடிக்கை. அதிலும் ஆர்.எஸ் பாரதியே
சம்மந்தப்பட்ட வழக்கில் அதிகபட்ச கவனம் இருந்திருக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் திமுக வழக்கறிஞர் அணி கோட்டைவிட்டது எப்படி?

பொதுக்குழுவுக்கு பிறகு நிலைமை சரியில்லை – புலம்பும் திமுகவினர்

திமுக உயர் வட்டாரங்களில் பேசியபோது, ‘’பொதுக்குழுவிற்கு பிறகு கட்சி நிர்வாகமே குழம்பிப்போய் கிடக்கிறது. யாருக்கு என்ன அதிகாரம்ணு தெரியல. புதிய நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆர்.எஸ் பாரதியும் படு அப்செட்டில் இருக்கிறார். வெளியே சிரித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுப்பதோடு சரி. உள்ளுக்குள் கடும் புகைச்சலாகத்தான் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்த குளறுபடி நடந்துவிட்டது. மொத்தத்தில் கட்சிக்குள் இப்போது நிலைமை சரியில்லை’’ என்கிறார்கள்.
திமுகவில் நடக்கும் இத்தகைய குளறுபடிகளை ரசித்தபடி அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது பாமக.