ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்பே நன்கொடையாக ரூ.41 கோடி குவிந்தது..

 

ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்பே நன்கொடையாக ரூ.41 கோடி குவிந்தது..

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2019 நவம்பர் 9ம் தேதியன்று அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டி கொள்ள அனுமதி அளித்தது. மேலும் ராமர் கோயில் கட்டுமான பணிகளை அறக்கட்டளையின் வாயிலாக மேற்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பிரம்மாண்டமாக உருவாக உள்ள ராமர் கோயிலின் கட்டுமான பணிகளுக்காக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைத்தது.

ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்பே நன்கொடையாக ரூ.41 கோடி குவிந்தது..

அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுமானத்துக்கு பக்தர்கள் வழங்கும் நன்கொடையை பெற்று வருகிறது. ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை கடந்த 5ம் தேதியன்று நடைபெற்றது. அதற்கு முதல்நாள் வரை ராமர் கோயில் கட்டுமான பணிக்காக ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மொத்தம் ரூ.41 கோடி பெற்றுள்ளது. இது தொடர்பாக அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கூறுகையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று கணக்கு புத்தகத்தில் பார்த்தபோது அறக்கட்டளைக்கு வந்த மொத்த நன்கொடை ரூ.30 கோடியாக இருந்தது. எஞ்சிய ரூ.11 கோடி மொரரி பாபு நன்கொடையாக வழங்கியது. கடந்த புதன்கிழமையன்று மத தலைவர்கள் நன்கொடையாக வழங்கியது இந்த கணக்கில் சேர்க்கப்படவில்லை என தெரிவித்தார்.

ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்பே நன்கொடையாக ரூ.41 கோடி குவிந்தது..

அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் கூறுகையில், இந்த ஆண்டு ராம நவமி அன்று நெட் பேங்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டது முதல் ஆன்லைனில் நன்கொடை வர தொடங்கியது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வழிமுறையில் நன்கொடை செலுத்தினர். ரூ.11 முதல் தங்களால் எவ்வளவு முடியுமோ அந்த தொகையை நன்கொடையாக வழங்கினர். பெரிய நன்கொடை செக் அல்லது இ பேங்கிங் வழிமுறையில் வந்தது என தெரிவித்தார்.