எதிர்கட்சி தலைவராக தனது பங்கை திறம்பட செய்கிறார்.. பட்னாவிஸை பாராட்டிய சிவ சேனா

 

எதிர்கட்சி தலைவராக தனது பங்கை திறம்பட செய்கிறார்.. பட்னாவிஸை பாராட்டிய சிவ சேனா

சிவ சேனாவின் அரசியல் பத்திரிகையான சாம்னாவில் எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸை பாராட்டி எழுதப்பட்டுள்ளது. சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது: மாநிலத்தின் முதல்வராக இருந்தது போலவே இளமையும், ஆற்றலும் கொண்டுள்ளார். அவரது சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதில், தேவந்திர பட்னாவிஸ் தனது நெருங்கிய கட்சி ஊழியருட் பேசுகையில், தனக்கு பரிசோதனையில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானால் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில்தான் சேருவேன் என தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவராக தனது பங்கை திறம்பட செய்கிறார்.. பட்னாவிஸை பாராட்டிய சிவ சேனா

கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் மாநிலத்தில் உள்ள அரசு சுகாதார இயந்திரங்கள் குறித்து பட்னாவிஸ் திருப்தி தெரிவித்துள்ளார். இது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அரசாங்கத்தின் மன உறுதியை உயர்த்தியுள்ளது. இந்த அறிக்கைக்காக முன்னாள் முதல்வர் பாராட்டப்பட வேண்டும். ஆனால் அவர் கிண்டல் செய்யப்படுகிறார். இது சரியானது அல்ல.

எதிர்கட்சி தலைவராக தனது பங்கை திறம்பட செய்கிறார்.. பட்னாவிஸை பாராட்டிய சிவ சேனா

எதிர்கட்சி தலைவராக அவர் தனது பணியை சிறப்பாக செய்கிறார் என நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறோம். பட்னாவிஸ் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோவிட் நிவாரண பணிகள் மற்றும் சுகாதார வசதிகளை கண்காணித்து வருகிறார். கொரோனா வைரசுக்கு எதிரான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு மேற்கொண்டு வரும் பணிகள் அவருக்கு திருப்தி அளிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தேவந்திர பட்னாவிஸ் பேட்டி ஒன்றில், மகாராஷ்டிராவில் ஆப்ரேஷன் தாமரை எதுவும் நடக்கவில்லை. மேலும் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசாங்கம் அதன் உள் முரண்பாடுகள் காரணமாக தானாகவே சரிந்து விடும் என தெரிவித்தார்.