ஆட்கள் தேர்வு இப்போதைக்கு இல்லை! – ரயில்வே அமைச்சகம் முடிவு

 

ஆட்கள் தேர்வு இப்போதைக்கு இல்லை! – ரயில்வே அமைச்சகம் முடிவு

இந்திய ரயில்வே பணிக்கு பணியாளர்களை எடுப்பதை நிறுத்தி வைக்கும்படி ரயில்வே மண்டல பொது மேலாளர்களுக்கு ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட புதிய பணியிடங்கள் பற்றிய ஆய்வையும் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

ஆட்கள் தேர்வு இப்போதைக்கு இல்லை! – ரயில்வே அமைச்சகம் முடிவுகொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து துறைகளும் முடங்கிப் போயுள்ளன. இதனால் பலரும் வேலை இழந்து வருகின்றனர். வேலையில் இருப்பவர்களுக்கும் சம்பளம் குறைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரயில்வே துறையில் பணியாளர்களை எடுப்பதை ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்ட் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. அத்தியாவசிய பாதுகாப்புப் பணி தவிர்த்து மற்ற எந்த துறைக்கும் பணியாளர்களை, ஊழியர்களை எடுப்பது இல்லை என்று இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது.

ஆட்கள் தேர்வு இப்போதைக்கு இல்லை! – ரயில்வே அமைச்சகம் முடிவுமேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்பட்ட பணியிடங்களை பற்றி ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. புதிய பணியிடங்களில் பணியாளர்கள் யாரும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நியமிக்கப்படவில்லை என்றால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் நிதி நிலையைப் பொருத்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அனைத்து ரயில்வே மண்டல பொது மேலாளர்களுக்கும் அனுப்பிய உத்தரவில் ரயில்வே வாரிய இணை இயக்குநர் அஜெய் ஜா தெரிவித்துள்ளார்.