பிரான்சிலிருந்து 8 மணி நேரத்தில் இந்தியா வந்த 3 ரபேல் போர் விமானங்கள்…. ராஜ்நாத் சிங் வாழ்த்து

பிரான்சிலிருந்து 8 மணி நேரத்தில் இந்தியா வந்த 3 ரபேல் போர் விமானங்கள்…. ராஜ்நாத் சிங் வாழ்த்து

பிரான்சிலிருந்து நேற்று கிளம்பிய 3 ரபேல் போர் விமானங்களும் இடை விடாமல் பறந்து 8 மணி நேரத்தில் இந்தியா வந்தடைந்தன.

பிரான்சின் டசால்ட் நிறுவனம் நவம்பர் 4ம் தேதியன்று மேலும் 3 ரபேல் போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்கும் தகவல் வெளியானது. அதன்படி, பிரான்சிலிருந்து 3 ரபேல் போர் விமானங்கள் நேற்று மதியம் 12 மணிக்கு மேல் இந்தியாவுக்கு கிளம்பின. அந்த விமானங்கள் எங்கும் நிற்காமல் 8 மணி நேரத்தில் இந்தியா வந்தடைந்தன. நேற்று இரவு சரியாக 8.14 மணிக்கு 3 ரபேல் போர் விமானங்களும் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் தரையிறங்கின.

பிரான்சிலிருந்து 8 மணி நேரத்தில் இந்தியா வந்த 3 ரபேல் போர் விமானங்கள்…. ராஜ்நாத் சிங் வாழ்த்து
ராஜ்நாத் சிங்

பிரான்சிலிருந்து கிளம்பிய அந்த 3 ரபேல் போர் விமானங்களுக்கும் நடுவானில் 3 முறை எரிபொருள் நிரப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த விமானங்கள் இடை விடாமல் பறந்து வந்தது விமானப்படையின் நீண்ட தூர செயல்பாட்டு திறனை காட்டுகிறது. மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் வந்துள்ளது இந்திய விமானபடைக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது.

பிரான்சிலிருந்து 8 மணி நேரத்தில் இந்தியா வந்த 3 ரபேல் போர் விமானங்கள்…. ராஜ்நாத் சிங் வாழ்த்து
நடுவானில் ரபேல் விமானத்துக்கு எரிபொருள் நிரப்புதல்

பிரான்சிலிருந்து 3 ரபேல் போர் விமானங்களையும் பாதுகாப்பாக கொண்டு வந்ததற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். மிகவும் சிக்கலான பணியை தொழில் ரீதியாகவும், பாதுகாப்பாகவும் வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக இந்திய விமானப்படைக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்ததாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.