கஜினி முகம்மது போல அடிக்கடி படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்-பயிர்களை தாக்குவதால் உணவுப்பஞ்சம் ஏற்படும் அபாயம் ..

கஜினி முகம்மது போல அடிக்கடி படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்-பயிர்களை தாக்குவதால் உணவுப்பஞ்சம் ஏற்படும் அபாயம் ..

கொரானாவால் நாட்டின் நிதி நிலைமை கெட்டது என்றால்,சமீபத்தில் படையடுத்து வரும் வெட்டுக்கிளிகளால் எதிர்காலத்தில் உணவுப்பஞ்சம் ஏற்படுமோ என்று அச்சம் உருவாகியுள்ளது .வடமாநிலங்களில் உள்ள விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் வேலையினை வெட்டுக்கிளிகள் செய்து வருகின்றன .

கஜினி முகம்மது போல அடிக்கடி படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்-பயிர்களை தாக்குவதால் உணவுப்பஞ்சம் ஏற்படும் அபாயம் ..

ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தின் சர்மதுரா பகுதியில் வெட்டுக்கிளி கூட்டமொன்று திங்கள்கிழமை பயிர்களின் மீது தாக்கியது. இந்த வெட்டுக்கிளிகளின் திடீர் தாக்குதல் விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
“10-15 வெட்டுக்கிளிகளின் கூட்டம் இதற்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள விவசாய பயிர்களை அழித்தது .இந்த முறை இந்த கூட்டம் மத்தியபிரதேசம் வழியாக உள்ளே வந்துள்ளது .அங்கிருந்து வந்த கூட்டம் அருகிலுள்ள எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தாக்கியுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது .அவர்கள் உள்ளூர் மக்கள் உதவியுடன் இந்த வெட்டுக்கிளிகளை கண்டுபிடித்தனர் .மேலும் விவசாயிகளுக்கு அந்த வெட்டுக்கிளிகளை எப்படி அழிப்பது என்று நாங்கள் அறிவுரை வழங்கியுள்ளோம்.பாத்திரங்களை உருட்டியும் ,சத்தம் உருவாக்கியும் அவைகளை அழிக்க முடியும் ”என்று மாநில வேளாண்மைத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

கஜினி முகம்மது போல அடிக்கடி படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்-பயிர்களை தாக்குவதால் உணவுப்பஞ்சம் ஏற்படும் அபாயம் ..

சமீபத்தில், ஜெய்சால்மரில் ஹெலிகாப்டர்கள் அதிக அளவில் வெட்டுக்கிளிகள் மீது பூச்சிக்கொல்லிகளை தெளிக்க பயன்படுத்தப்பட்டன. வெட்டுக்கிளியின் திரள் பஞ்சாப் மற்றும் ஹரியானா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்பட்டன, அங்கு அவை ஏராளமான பயிர்களை அழித்தன.