கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்குமா?

 

கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்குமா?

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வு கூட்டம் நாளை தொடங்குகிறது. அந்த கூட்டத்தில் முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி எந்தவித மாற்றங்கள் செய்ய வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வு கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும். இந்த கூட்டத்தில் முக்கிய கடன்களுக்கான (ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ ரேட்) வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி முடிவு செய்யும். கடனுக்கான வட்டியை நிர்ணயம் செய்யும் போது நடப்பில் உள்ள சில்லரை விலை பணவீக்க நிலவரத்தை மனதில் கொண்டே முடிவு செய்யும். ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகந்த தாஸ் தலைமையில் நாளை ரிசர்வ் வங்கியின் 2 நாள் நிதிக் கொள்கை ஆய்வு கூட்டம் நாளை தொடங்குகிறது.

கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்குமா?
சக்திகந்த தாஸ்

அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தொடர்பான விவரங்களை டிசம்பர் 4ம் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவிப்பார். கடந்த 2 நிதிக் கொள்கை ஆய்வு கூட்டத்திலும் முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. நாளை தொடங்கும் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்திலாவது கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்குமா என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்குமா?
இந்திய ரிசர்வ் வங்கி

ஆனால் முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு இலக்கை (6 சதவீதம்) காட்டிலும் சில்லரை விலை பணவீக்கம் அதிகமாக உள்ளதால் முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமும் செய்ய வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.