ஈரோடு மாவட்டத்தில் வழிபாட்டுத்தலங்களில் நாளை முதல் பொதுமக்களுக்கு வழிபட அனுமதி- முன்னேற்பாடுகள் தீவிரம்!

 

ஈரோடு மாவட்டத்தில் வழிபாட்டுத்தலங்களில் நாளை முதல் பொதுமக்களுக்கு வழிபட அனுமதி- முன்னேற்பாடுகள் தீவிரம்!

ஈரோடு ஆக 31 –
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வழிபாட்டுத் தலங்களில் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டிருந்தது கடந்த 5 மாதங்களாக கோவில்களில் மக்கள் வழிபடாமல் இருந்தனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 1400 பெரிய சிறிய கோயில்கள் உள்ளன. அந்தந்த கோயில்களில் பூசாரிகள் மூலம் கால பூஜைகள் மட்டுமே நடைபெற்று கொண்டிருந்தது பின்னர் முதற்கட்டமாக கிராமப்புற கோவில்களில் பொதுமக்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆண்டு வருமானம் பத்தாயிரத்துக்கும் குறைவாக உள்ள கோவில்களை திறந்து பொது மக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டது இந்நிலையில் நேற்று ஊரடங்கு நீட்டிக்க பட்டாலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் மிக முக்கியமானவை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபட அனுமதி அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை பெரிய கோயில்களாகவும் புகழ் பெற்ற பல கோவில்கள் உள்ளன. சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன், பண்ணாரி கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், அந்தியூர் பத்ரகாளி கோவில், கொண்டத்துக்காளியம்மன் கோவில், பச்சைமலை முருகன் கோவில், சென்னிமலை முருகன் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், ஈரோடு மாநகரில் உள்ள பெரிய மாரியம்மன் சின்ன மாரியம்மன் கோவில், கோட்டை ஈஸ்வரன் பெருமாள் கோவில் என ஏராளமான கோவில்கள் உள்ளன இந்த கோவில்கள் அனைத்தும் இன்று சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர் கோவில் நடைபாதைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன நாளை கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வழிபாட்டுத்தலங்களில் நாளை முதல் பொதுமக்களுக்கு வழிபட அனுமதி- முன்னேற்பாடுகள் தீவிரம்!

சமூக இடைவெளியும் முறையாக கடைபிடிக்க வேண்டும். கோவிலுக்குள் நுழையும் முன் சனிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்க அளிக்கப்படும். பெரிய கோவில்களில் சாமி கும்பிட வரும் பக்தர்களின் வெப்பநிலையை கண்டறியும் வகையில் தெர்மல் ஸ்கேன் கருவி மூலம் பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களும் மசூதிகளிலும் பொதுமக்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவிக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தன. நாளை கோயில் சிறப்பு குறித்து சிவனடியார் அருள் பிரகாஷ் என்பவர் கூறும் போது, ஐந்து மாதங்களுக்குப் பிறகு நாளை கோவில் சென்று வழிபட இருக்கிறேன் இதற்கு அனுமதி அளித்த தமிழ் அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கோவில் திறக்கப்படுவதால் இனி மெல்ல மெல்ல கொரோனோ வைரஸ்ஒ ழியும் என்று நம்புகிறேன் என்றார்.
-ரமேஷ்கந்தசாமி