சாம்பாரில் எலி கிடந்ததால் அதிர்ச்சி; உணவகத்தை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம்

சாம்பாரில் எலி கிடந்ததால் அதிர்ச்சி; உணவகத்தை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம்

கோவை

கோவை அரசு மருத்துவமனை அருகேயுள்ள உணவகத்தில் சாம்பாரில் எலி இறந்து கிடந்ததாக வந்த புகாரின் பேரில், கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் திவ்யா. இவரது சகோதரர் கார்த்திகேயன் என்பவர் உடல் நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சாம்பாரில் எலி கிடந்ததால் அதிர்ச்சி; உணவகத்தை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம்

இந்நிலையில் இன்று காலை திவ்யா, மருத்துவமனைக்கு எதிரில் உள்ள டேஸ்டி என்ற உணவகத்தில் அவருக்கும், தம்பிக்கும் ஆப்பம், சாம்பார் ஆகியவற்றை வாங்கி சென்றுள்ளார். கார்த்திகேயன் அதை சாப்பிட்ட பின்னர் மீதி இருந்த சாம்பாரில் பார்த்தபோது, அதில் எலிக்குஞ்சு ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த திவ்யா உடனடியாக ஹோட்டல் உரிமையாளரிடம் சென்று முறையிட்டுள்ளார். ஆனால் அவர் உரிய பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த திவ்யா, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சாம்பாரில் எலி கிடந்ததால் அதிர்ச்சி; உணவகத்தை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம்

அப்போது திவ்யாவிற்கு ஆதரவாக ஏராளமானோர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் புகார் குறித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர். பின்னர் பேசிய அதிகாரிகள், இந்த விவகாரத்தில் விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.