‘பெண் குளிப்பதை வீடியோ எடுத்த’ சிலிண்டர் போட வந்த நபர் கைது!

 

‘பெண் குளிப்பதை வீடியோ எடுத்த’ சிலிண்டர் போட வந்த நபர் கைது!

கோவை அருகே பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற சிலிண்டர் போட வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் பொண்ணையராஜபுரம் பகுதியில் 49 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அந்த பெண்ணின் வீட்டுக்கு சிலிண்டர் போட வந்த நபர், குளிப்பதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்துள்ளார். துணியை எடுக்கும் போது ஏதேர்ச்சியாக அந்த நபர் வீடியோ எடுப்பதை அந்த பெண் பார்த்திருக்கிறார்.

‘பெண் குளிப்பதை வீடியோ எடுத்த’ சிலிண்டர் போட வந்த நபர் கைது!

அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிடவே, அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பாத்ரூமில் இருந்து வந்த அந்த பெண், அவசர அவசரமாக பைக்கை எடுத்துக் கொண்டு புறப்படுவதை பார்த்து அவர் தான் வீடியோ எடுத்திருப்பார் என யூகித்துள்ளார். இதனையடுத்து சிலிண்டர் போட வந்தவர் மீது அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் நபரை உடனடியாக கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

‘பெண் குளிப்பதை வீடியோ எடுத்த’ சிலிண்டர் போட வந்த நபர் கைது!

அப்போது, அவர் பெயர் செல்வராஜ் என்றும் அந்த பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து தான் வீடியோ எடுத்ததாகவும் அந்த நபர் ஒப்புக் கொண்டுள்ளார். அதன் படி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.