மோட்டோரோலா ஃபோன் வாங்க சரியான நேரம் ! – ரூ. 40 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிப்பு

 

மோட்டோரோலா ஃபோன் வாங்க சரியான நேரம் ! –  ரூ. 40 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிப்பு

நீங்க மோட்டோரோலா பிரியரா இருந்தா.. அதன் ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு இது மிக சரியான நேரம். பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது ஸ்மார்ட்போன்களுக்கு 40 ஆயிரம் வரை அதிரடி தள்ளுபடி வழங்குவதாக மோட்டோராலா அறிவித்துள்ளது.

மோட்டோரோலா ஃபோன் வாங்க சரியான நேரம் ! –  ரூ. 40 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிப்பு
மோட்டோரோலா ஃபோன் வாங்க சரியான நேரம் ! –  ரூ. 40 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிப்பு

அதன்படி, மோட்டோரோலா ரேசர் (2019) இந்தியாவில் அறிமுக விலையான 1 லட்சத்து 24 ஆயிரத்து 999 என்ற விலையில் 40 ஆயிரம் ரூபாய் குறைத்து, 84 ஆயிரத்து 999 என்ற விலைக்கு தர மோட்டோ முன்வந்துள்ளது. அதேப்போல மோட்டோராலா எட்ஜ் பிளஸ் போன் விலை 10 ஆயிரம் ரூபாய் குறைத்து 64,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.

மோட்டோரோலா ஃபோன் வாங்க சரியான நேரம் ! –  ரூ. 40 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிப்பு

அதேப்போல பியூஷன் பிளஸ் போன் ரூ. 1500 விலை குறைந்து 15,999க்கும், மோட்டோ ஜி9 1500 ருபாய் குறைந்து ரூ. 9,999க்கும் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. பட்ஜெட் போனான மோட்டோ இ7 பிளஸ் விலை 500 குறைவாக, 8,999க்கு பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேசின் போது விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

  • எஸ். முத்துக்குமார்