ஆகஸ்ட் 1ல் அமலுக்கு வருகிறது திட்டம்!- பத்திரப்பதிவு முடிந்தவுடன் உடனே பட்டா மாறுமா?

 

ஆகஸ்ட் 1ல் அமலுக்கு வருகிறது திட்டம்!- பத்திரப்பதிவு முடிந்தவுடன் உடனே பட்டா மாறுமா?

தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பத்திரப்பதிவு செய்த உடன் தானாகவே பட்டா மாறுதல் ஆகும் என்று சிலர் நினைத்திருக்கும் நிலையில், அதில் உள்ள சிக்கல்கள் தற்போது தெரியவந்துள்ளது.

ஆகஸ்ட் 1ல் அமலுக்கு வருகிறது திட்டம்!- பத்திரப்பதிவு முடிந்தவுடன் உடனே பட்டா மாறுமா?

தமிழகத்தில் வாங்கப்படும் மனை, வீடு உள்ளிட்டவைகள் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இதன் பின்னர் பட்டா வாங்க இசேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு முன்னதாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் அரசு குறிப்பிட்டுள்ள கட்டணத்தை செலுத்தி ரசீது கொடுக்கப்படும். இந்த ரசீதை விண்ணப்பத்துடன் இணைத்துக் கொடுக்க வேண்டும். இதன் பின்னர் நிலஅளவையருக்கு விண்ணப்பம் சென்றடையும். அவர் நிலத்தை அளந்து சம்பந்தப்பட்ட விஏஓவின் பார்வைக்கு கொண்டு செல்வார். அவர், பட்டா கோரி விண்ணப்பித்தவர்களிடம் ஒரிஜினல் டாக்மெண்ட்டை கொண்டு வரச் சொல்லுவார். அவர் சரிபார்த்த பின்னர், ஆர்ஐ-க்கு விண்ணப்பத்தை அனுப்பிவைப்பார். அவர் சரிபார்ப்புக்கு பின்னர் தாசில்தாருக்கு அனுப்பிவைப்பார்.

அவர் ஆவணங்கள் அனைத்தையும் சரிபார்த்து விட்டு இந்த விண்ணப்பதாரருக்கு பட்டா வழங்கலாம் என்று அனுமதி அளிப்பார். அதன் பின்னர் விண்ணப்பதாரருக்கு உங்களுக்கு பட்டா ரெடியாகி விட்டது. நீங்கள் சம்பந்தப்பட்ட ஆன்லைனில் போய் எடுத்துக் கொள்ளலாம் என்று மெசேஜ் வரும். இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. இப்படி பட்டா வாங்க மக்கள் படும்பாடு கொஞ்சம் நெஞ்சமல்ல. மக்களின் இந்த கஷ்டத்தைப் போக்க தமிழக அரசு பட்டா வழங்குவதில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதாவது ஒருவர், வீடோ, மனைகளையோ பத்திரப்பதிவு செய்தவுடன் சம்பந்தப்பட்ட ஏரியா விஏஓக்கு தகவல் சென்றடையும். அவர் விண்ணப்பதாரரை நேரில் அழைத்து ஒரிஜினல் டாக்மெண்ட்டை சரிபார்ப்பார். அதன் பின்னர் பட்டா அவருடைய பெயருக்கு மாறிவிடும். இந்த புதிய நடைமுறை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத் தாலுகாவில் கடந்த 17ம் தேதி சோதனை முறையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆகஸ்ட் 1ல் அமலுக்கு வருகிறது திட்டம்!- பத்திரப்பதிவு முடிந்தவுடன் உடனே பட்டா மாறுமா?

ஒரே சர்வே எண்களில் சொத்துக்கள் இருந்தால், பத்திரம் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு விடும் என்று கூறும் அதிகாரிகள், சொத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் அந்த சொத்துக்கு சொந்தக்காரரா, சொத்தில் வில்லங்கம் இருக்கிறதா, அதற்கான பட்டா இருக்கிறதா என சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்கள் ஆய்வு செய்வார்கள். அதன் பிறகு தானாக பட்டா மாறுதல் ஆகிவிடும்” என்கின்றனர்.